Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“டிராவிட்டின் தேனிலவு காலம் முடிந்துவிட்டது”.. இந்தியாவின் தொடர் சொதப்பல்.. சாபா கரீம் கடும் விளாசல்

துபாய்: ராகுல் டிராவிட்டிற்கு இன்னும் கால அவகாசம் கொடுக்க முடியாது என முன்னாள் இந்திய முன்னாள் வீரர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் இருந்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெளியேறியது.

லீக் சுற்றில் சிறப்பான வெற்றிகளை பெற்ற போதும், சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது.

இந்திய அணி சொதப்பல்

இந்திய அணி சொதப்பல்

இந்த முறை ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி வெல்வதற்கு தான் அதிக வாய்ப்புள்ளதாக வல்லுநர்களால் கணிக்கப்பட்டது. அந்த அளவிற்கு அணி தேர்வு மிகவும் பலமாக இருந்தது. ஆனால் ப்ளேயிங் 11ல் வீரர்கள் தேர்வு தவறாக இருந்ததால் மீண்டும் ஒருமுறை சொதப்பியது. இதனால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

சாபா கரீம் எச்சரிக்கை

சாபா கரீம் எச்சரிக்கை

இந்நிலையில் முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி சாபா கரீம் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ராகுல் டிராவிட் இந்திய அணியில் தனது தேனிலவு காலங்கள் முடிவடைந்துவிட்டதை புரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது, புதிய பயிற்சியாளர் என்ற போர்வை காலம் முடிந்துவிட்டது. சிறு சிறு மாற்றங்களை ஒன்று சேர்த்து பெரிய விஷயமாக உருவாக்க வேண்டும். அதனை செய்யக்கூடிய காலம் தான் இது.

 டெஸ்ட் வெற்றிகள்

டெஸ்ட் வெற்றிகள்

இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர் வெற்றிகளை பெற்றது. ஆனால் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துடனான டெஸ்ட்களில் தோற்றது. என்னை பொறுத்தவரையில் அந்த வெள்ளைப்பந்து கிரிக்கெட் வெற்றிகளுக்கு பதிலாக டெஸ்ட்டில் வெற்றி பெற்றிருந்திருக்கலாம் எனக் கூறுவேன். டிராவிட்டிடம் இருந்து அதை தான் எதிர்பார்க்கிறேன்.

 2 முக்கிய விஷயங்கள்

2 முக்கிய விஷயங்கள்

ராகுல் டிராவிட் ஆட்டத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கக்கூடியவர். எனவே சிறந்த பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்றால் இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும். முதலில் ஐசிசி தொடர்களை வென்றுக் கொடுக்க வேண்டும். 2வதாக SENA நாடுகளில் டெஸ்ட் தொடர்களை வென்றுக் கொடுக்க வேண்டும். எனவே இதில் இனி அவர் கவனம் செலுத்துவார் என நினைப்பதாக சாபா கரீம் கூறியுள்ளார்.

Story first published: Saturday, September 10, 2022, 17:27 [IST]
Other articles published on Sep 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+