Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இந்தியா அல்ல, இந்த அணி தான்.. முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர்

மும்பை : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.

முதலில் தகுதி சுற்று போட்டிகள் நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து சூப்பர் 12 பிரிவு போட்டிகள் அக்.21ஆம் தேதி தொடங்குகிறது .

டி20 உலக கோப்பைக்காக உலகின் பல்வேறு அணிகளும் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு இல்லை என்று முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் சபாக்கரிம் கருத்து தெரிவித்திருக்கிறார். என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி தான் மீண்டும் டி20 உலக கோப்பையை வெல்ல போகிறது.

saba Karim on his favourite to win ICC T20 world cup 2022

அதற்கு காரணம் ஆஸ்திரேலியா அணி தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. அவர்கள் மைதானத்திற்கு ஏற்ப வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய மைதானங்கள் மிகவும் பெரியது. டிம் டேவிட், மேக்ஸ்வெல் போன்ற அதிரடி வீரர்கள் அங்கு பெரிய ஷாட்கள் ஆடி ரன் குவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலிய அணி பலமாக விளங்குகிறது. இந்திய தொடரிலே பாருங்கள் மார்கஸ் ஸ்டோநிஸ், மிச்சல் மார்ஸ், டேவிட் வார்னர் போன்ற அதிரடி வீரர்கள் இல்லாமலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்தியா திணறுகிறது. இப்படி இருக்க அவர்கள் சொந்த மண்ணில் விளையாடினால் அவர்களை எதிர்கொள்வது சுலபமான காரியம் அல்ல என்று அவர் கூறினார்.

Story first published: Saturday, September 24, 2022, 18:04 [IST]
Other articles published on Sep 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+