Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு வீரர் ஃபார்முக்கு வந்தால் போதும்.. உலகக்கோப்பை வெற்றி இரட்டிப்பாகும்.. சாபா கரீம் கணிப்பு

மும்பை: இந்திய அணியில் ஒரு முக்கிய வீரர் மட்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டால் உலகக்கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என முன்னாள் வீரர் சாபா கரீம் கணித்துள்ளார்.

Recommended Video

T20 World Cup-க்கு முன்னால Hardik Pandya Form-க்கு திரும்ப வேண்டும் - Saba Karim கணிப்பு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

முதலில் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த இந்த தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பிசிசிஐ போட்ட திட்டம்

பிசிசிஐ போட்ட திட்டம்

இந்த தொடருக்காக தயாராகும் பணிகளில் பிசிசிஐ தற்போது இருந்தே தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதன்படி வீரர்களின் ஃபார்மை தெரிந்துக்கொள்ள ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகளை உருவாக்கி இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் அனுப்பியுள்ளது. சீனியர் வீரர்கள் இங்கிலாந்திலும், ஐபிஎல் கலக்கிய இளம் வீரர்கள் இலங்கை சுற்றுப்பயணத்திலும் பங்குபெற்றுள்ளனர். இந்த இரு தொடர்களுமே டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வில் முக்கிய பங்காற்றவிருக்கிறது.

சாபா கரீம் கணிப்பு

சாபா கரீம் கணிப்பு

இந்நிலையில் இதுகுறித்து புதிய கணிப்பு ஒன்றை சாபா கரீம் கூறியுள்ளார். அதில், ஹர்திக் பாண்ட்யா மட்டும் முழு ஃபார்முக்கு வந்துவிட்டால், டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இரட்டிப்பு ஆகிவிடும். உலகக்கோப்பை தொடருக்குள் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே பாண்ட்யா ஃபார்முக்கு திரும்பிவிட்டால் மிகவும் பிரகாசமான சூழல் நிலவும்.

சவாலான தொடர்

சவாலான தொடர்

ஹர்திக் பாண்ட்யாவுக்கு இலங்கை தொடர் சவாலானதாக இருக்கும். ஐபிஎல் தொடரின் போது சென்னை போன்ற சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் அவர் மிகவும் சிரமப்பட்டார். இலங்கையும் அதே போன்ற தன்மை கொண்ட பிட்ச் தான். எனவே ஒருவேளை இலங்கை தொடரில் அவர் சிறப்பாக விளையாடிவிட்டால் இந்திய அணியில் மீண்டும் தனது இடத்தை பிடித்துவிடுவார்.

அறுவைசிகிச்சை

அறுவைசிகிச்சை

கடந்த 2019ம் ஆண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பாண்ட்யா பந்துவீச்சில் இருந்து பெரும் அளவில் விலகியுள்ளார். இவர் பந்துவீச முடியாது என்று கூறிய காரணத்தால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே இலங்கை தொடரை அவர் நன்கு பயன்படுத்திக்கொண்டால் தான் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கமுடியும் என்ற நிலை உள்ளது.

Story first published: Tuesday, July 13, 2021, 19:02 [IST]
Other articles published on Jul 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+