Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சரியான நேரம் வந்துவிட்டது”.. பும்ரா, ஷமி, ஜடேஜாவுக்கு ஆப்பு ரெடி.. முன்னாள் வீரர் கூறியுள்ள யோசனை!

மும்பை: ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி போன்ற முன்னணி வீரர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் முன்னாள் வீரர் சாபா கரீம் யோசனை வழங்கியுள்ளார்.

இந்திய அணி தற்போது வங்கதேச சுற்றுப்பயணத்தில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில் டெஸ்ட் தொடரும் தொடங்கவுள்ளது.

நியூசிலாந்துடன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா, மீண்டும் இந்த தொடரிலும் தோல்வி முகத்தையே பெற்றுள்ளது. முதல் 2 போட்டிகளிலும் வங்கதேசம் அபார வெற்றியை பெற்று தொடரை வென்றுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் தொடர்

வங்கதேச கிரிக்கெட் தொடர்

இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா, முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை. இதுமட்டுமல்லாமல் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாடமாட்டார் என தெரிகிறது. இதனால் 50 ஓவர் கிரிக்கெட்டிற்கான இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது.

சாபா கரீம் விளக்கம்

சாபா கரீம் விளக்கம்

இந்நிலையில் இந்த சிக்கலை போக்க முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி சாபா கரீம் யோசனை கூறியுள்ளார். அதில், பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் காயமடைந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. இந்திய அணி தனது அடுத்தக்கட்ட வேகப்பந்துவீச்சாளர் படையை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஸ்பின்னர்களுக்கும் இதே நிலைமை தான் உள்ளது.

ஸ்பின்னர்களின் பட்டியல்

ஸ்பின்னர்களின் பட்டியல்

பும்ரா, ஷமி என இரண்டு பவுலர்கள் மட்டுமே பெரிது என இருக்கக்கூடாது. மற்ற வீரர்களை முயற்சி செய்யும் நேரம் முடிந்துவிட்டது. இனி தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுத்து மெயின் பவுலர்களாக மாற்ற வேண்டும். இந்தியாவின் முன்னணி ஸ்பின்னர்கள் யார்? யுவேந்திர சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தரா? அப்படியென்றால் அவர்களை தொடர்ந்து விளையாட வையுங்கள். இனி அது மட்டும் தான் கைக்கொடுக்கும் என சாபா கரீம் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட்

2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்தியாவுக்கு இன்னும் சுமார் 20 போட்டிகள் மட்டுமே இருப்பதால், அவை அனைத்தையும் பயன்படுத்தி வெற்றி காண வேண்டும். இல்லையென்றால் சொந்த மண்ணிலேயே கோப்பையை வெல்ல முடியாத சூழல் இந்திய அணிக்கு உருவாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 9, 2022, 13:33 [IST]
Other articles published on Dec 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+