Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவர டீம்லயே சேர்க்காதீங்க”.. முக்கிய வீரரின் இடத்திற்கே பிரச்சினை.. முன்னாள் வீரர் காட்டம் - காரணம்

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் சீனியர் வீரர் ஒருவரை சேர்க்கவேக் கூடாது என முன்னாள் வீரர் சாபா கரீம் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது.

இதில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. எனினும் தற்போது ஒருநாள் போட்டி தொடருக்கான வீரர்கள் தேர்வு நடந்து வருகிறது.

வீரர்கள் தேர்வு

வீரர்கள் தேர்வு

இந்தியாவின் பிரபல உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே டிராபி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இதில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களையும் ஒருநாள் அணிக்கு தேர்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏற்றார் போல விஜய் ஹசாரே டிராபி தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறது.

விஜய் ஹசாரே டிராபி

விஜய் ஹசாரே டிராபி

வெங்கடேஷ் ஐயர் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டி வருவதால், ஹர்திக் பாண்ட்யாவின் இடத்திற்கு அவரை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல ஓப்பனிங்கில் முதலில் சீனியர் வீரர் ஷிகர் தவானை அணிக்குள் கொண்டு வரலாம் என கூறப்பட்டது.ஆனால் தற்போது ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி சதங்களை குவித்து வருவதால், இனி ஷிகர் தவனுக்கு இடம் கிடைக்காது எனக் கருதப்படுகிறது.

சாபா கரீம் பேச்சு

சாபா கரீம் பேச்சு

இந்நிலையில் ஷிகர் தவானை அணியில் சேர்க்கவே கூடாது என முன்னாள் வீரர் சாபா கரீம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஷிகர் தவானை தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் சேர்த்தால் ப்ளேயிங் 11ல் இடம் கிடைக்குமா?, கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா இருவரும் டெஸ்டில் ஓபனர்களாக களமிறங்குவார்கள். இதே போல ஒருநாள் போட்டி தொடரிலும் ஓப்பனர்களாக களமிறங்குவார்கள். இப்படிபட்ட சூழலில் தவானுக்கு இடம் கொடுத்தால் என்ன பயன்.

Recommended Video

Dhawan to return for South Africa ODIs | IND vs SA | OneIndia Tamil
என்ன தேவை உள்ளது

என்ன தேவை உள்ளது

தவானை அணியில் சேர்க்க வேண்டிய தேவை என்ன உள்ளது. ஒருவேளை தென்னாப்பிரிக்காவில் இந்திய அணிக்கு இடதுகை வலதுகை திட்டம் தேவைப்பட்டால் மட்டுமே தவானை சேர்க்க வாய்ப்புள்ளது. ஆனால், அவரின் ஃபார்மும் தற்போது சரிவர இல்லை என்பதால் அவர் அணியில் சேர்க்கப்படமாட்டார் என சாபா கரீம் கூறியுள்ளார்.

Story first published: Monday, December 13, 2021, 20:12 [IST]
Other articles published on Dec 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+