சச்சின் இறுதி ஆட்டம்: டிக்கெட்டுக்கு முந்தியடித்த ரசிகர்கள், கிராஷ் ஆன இணையதளம்
மும்பை: சச்சின் டெண்டுல்கர் விளையாடும் இறுதி ஆட்டத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளத்தில் ஏராளமானோர் முந்தியடித்ததால் இணையதளம் கிராஷானது.
சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவர் தனது 199வது டெஸ்ட் போட்டியை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடினார்.
இந்நிலையில் அவர் தனது இறுதியாட்டத்தை அதாவது 200வது டெஸ்ட் போட்டியை மும்பையில் உள்ள வாங்கடே ஸ்டேடியத்தில் விளையாடவிருக்கிறார். இந்த போட்டி வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறுகிறது.

வியாழக்கிழமை
சச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை துவங்குகிறது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் பேராவலாக உள்ளனர்.

இணையதளம்
சச்சினின் 200வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்கும் உரிமையை க்யாஜூங்கா.காம்(KyaZoonga.Com) என்ற இணையதளத்திற்கு அளித்தது மும்பை கிரிக்கெட் சங்கம்.

டிக்கெட் முன்பதிவு
க்யாஜூங்கா.காமில் சச்சினின் இறுதியாட்டத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 11 மணிக்கு துவங்கியது. ரசிகர்கள் அடித்துப் பிடித்து டிக்கெட்டை முன்பதிவு செய்ய இணையதளத்தை நாடினர்.

இணையதளம் க்ராஷ்
ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்ய க்யாஜூங்கா.காமிற்கு சென்றனர். ஆனால் அவர்களால் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியவில்லை. காரணம் இணையதளம் க்ராஷாகிவிட்டது. இதனால் சச்சின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications