For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் மறுபடியும் 'கேப்டன்' ஆனார்.. ஜெயிச்சுருமாப்பா எம்சிசி...!?!

லண்டன்: ஆஹா.. மறுபடியும் சச்சின் டெண்டுல்கரை கேப்டனாக்கி விட்டார்கள். நல்லவேளையாக இந்திய அணிக்கு கேப்டனாக்கவில்லை. எம்சிசி எனப்படும் மெர்லிபோன் கிரிக்கெட் கிளப் அணியின் கேப்டனாக்கியுள்ளனர் சச்சினை.

லார்ஸ்ட் மைதானத்தின் 200வது போட்டியை முன்னிட்டு இந்த கெளரவம் கிடைத்துள்ளது சச்சினுக்கு.

ஷான் வார்னே தலைமையிலான ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணிக்கு எதிராக எம்சிசி அணி ஜூலை 5ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மோதவுள்ளது.

லாரா - டிராவிட்

லாரா - டிராவிட்

சச்சின் கேப்டனாகியுள்ள அணியில் பிரையன் லாரா, ராகுல் டிராவிட் உள்ளிட்ட பெரும் ஜாம்பவான்களும் இடம் பெற்றுள்ளனர்.

சந்தர்பால் - சயீத் அஜ்மல்

சந்தர்பால் - சயீத் அஜ்மல்

இவர்கள் தவிர பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், மேற்கு இந்தியத் தீவுகளின் ஷிவ்நரைன் சந்தர்பால் ஆகியோரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.

ரெஸ்ட் ஆப் தி வேர்ல்டில் ஷேவாக்

ரெஸ்ட் ஆப் தி வேர்ல்டில் ஷேவாக்

இந்திய வீரர்கள் ஷேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணியில் இடம் பெறுகின்றனர்.

எம்சிசி அணி வீரர்கள்

எம்சிசி அணி வீரர்கள்

சச்சின், சயீத் அஜ்மல், சந்தர்பால், டிராவிட், ஆரோன் பின்ச், உமர் கல், பிரையன் லாரா, பிரெட் லீ, கிறிஸ் ரீட், ஷான் டெய்ட், டேணியல் வெட்டோரி.

ரெட்ஸ் ஆப் வேர்ல்ட் அணி

ரெட்ஸ் ஆப் வேர்ல்ட் அணி

ஷான் வார்னே, ஷாஹித் அப்ரிதி, டினோ பெஸ்ட், பால் காலிங்வுட், ஆடம் கில்கிறைஸ்ட், தமீம் இக்பால், முத்தையா முரளீதரன், கெவின் பீ்ட்டர்சன், ஷேவாக், பீட்டர் சிடில், யுவராஜ் சிங்.

Story first published: Thursday, May 29, 2014, 7:20 [IST]
Other articles published on May 29, 2014
English summary
Sachin Tendulkar will captain the Marylebone Cricket Club (MCC) side which has Brian Lara and Rahul Dravid among others for the Lord's Bicentenary match against Rest of the World, led by Shane Warne. Present and past international stars will line up at the Lord's cricket ground on July 5, Saturday for this game.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X