Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

49 வது சதமடித்து சச்சின் புதிய சாதனை!

Sachin
பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவி்ன் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 49வது சதத்தை அடித்தார்.

பெங்களூரில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 478 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்று 2வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்துள்ளது.

சச்சின் தெண்டுல்கர் 44 ரன்களுடனும், முரளி விஜய் 42 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இன்று 3வது ஆட்டத்தின் போது தொடர்ந்து ஆடிய சச்சின் தெண்டுல்கர் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது 49 வது சதத்தை நிறைவு செய்தார்.

169 பந்துகளில் 113 ரன்களுடன் களத்தில் உள்ளார் சச்சின். இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+