Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மான் கில்- சச்சின் மகள் சாரா டேட்டிங்,,,!! இணையத்தை கலக்கும் புகைப்படம்.. கோவாவில் கொண்டாட்டம்..

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்மான் கில்லும், சச்சின் மகள் சாராவும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகின.

இது தொடர்பாக இருவரும் வாய் திறக்காத நிலையில், சச்சின் வீட்டார் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சுப்மான் கில் கிரிக்கெட்டிலும், சச்சின் மகள் சாரா மாடலிங்கிலும் அதீத கவனம் செலுத்த தொடங்கினர்.

பிரிந்த ஜோடி

பிரிந்த ஜோடி

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் சுப்மான் கில் நியூசிலாந்து தொடரில் விளையாடிய போது, சாரா தனது ஆண் நண்பருடன் இருந்த புகைப்படம் வைரலானது. இதனால் சுப்மால் கில்லை, , சாரா டெண்டுல்கர் பிரிந்து வேறு ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியானது.

கோவா டேட்டிங்

கோவா டேட்டிங்

ஆனால், சுப்மான் கில்லும், சாரா டெண்டுல்கரும் காதலிப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. மேலும் இருவரும் தனி தனியே வெளியிட்ட புகைப்படங்கள் மூலம், அவர்கள் இருவரும் கோவாவுக்கு டேட்டிங் சென்றது உறுதியாகியுள்ளது. சுப்மான் கில் தாம் கோவாவில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதே போல் சாரா டெண்டுல்கரும் கோவா படங்களை பதிவிட்டுள்ளார்

ஒரே இடத்தில் போட்டோ

ஒரே இடத்தில் போட்டோ

சுப்மான் கில் தனக்கு பரிசாக கிடைத்த ஜீப் முன் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். இதே போன்று அதே ஜீப் உள்ளே சாரா இருப்பது போன்ற புகைப்படம், சாரா இன்ஸ்டாகிராமில் பதிவானது. உணவு விடுதி ஒன்றில் இருப்பது போல் சுப்மான் கில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதே விடுதியில் இருப்பது போல் சாராவும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சச்சின் அறிவுரை

சச்சின் அறிவுரை

இதன் மூலம் இருவரும் டேட்டிங் செய்வது உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். மும்பை டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில் விளையாடிய போது , அவர் அடித்த ஷாட்க்கு எல்லாம் ரசிகர்கள் சச்சின்.. சச்சின் என்று கத்தி ஆரவாரம் செய்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. அப்போது சுப்மான் கில் கிரிக்கெட்டில் கூடுதல் கவனம் செலுத்தினால், பெரிய சாதனைகளை புரிய முடியும் என்று சச்சின் அறிவுரை கூறியது நினைவுகூறத்தக்கது .

Story first published: Sunday, January 9, 2022, 13:32 [IST]
Other articles published on Jan 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+