For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாவ்வ்வ்வ்வ்.. கோஹ்லியை வாழ்த்திய "கடவுள்"!

மும்பை: விராத் கோஹ்லியின் ஆட்டத்தைப் பார்த்து அத்தனை பேரும் பாராட்டிப் புகழ்ந்து தள்ளிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கோஹ்லியால் பெரிதும் மதிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும், கோஹ்லியை வாயாரப் புகழ்ந்துள்ளார். கவாஸ்கரோ ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு அடுத்த சச்சின் கோஹ்லிதான் என்று பாராட்டித் தள்ளியுள்ளார்.

மொஹாலியில் ஆஸ்திரேலியாவை ஓட ஓட விரட்டிய விராத் கோஹ்லியின் அட்டகாச ஆட்டம் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டது. கோஹ்லியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

கவாஸ்கர் பேருவகை

கவாஸ்கர் பேருவகை

கவாஸ்கர் கூறுகையில், விராத் கோஹ்லியின் சகாப்தம் தொடங்கி விட்டதாகவே நான் கருதுகிறேன். அவர் டெஸ்ட் கேப்டனாக என்று உருவெடுத்தாரோ அன்றே அது தொடங்கி விட்டது. இப்போது இன்னும் அது வேகம் பிடித்துள்ளது. அடுத்த சச்சினாக உருவெடுத்துள்ளார் கோஹ்லி என்றார்.

ஷேவாக் சந்தோஷம்

ஷேவாக் சந்தோஷம்

வீரேந்திர ஷேவாக் கூறுகையில், கோஹ்லிதான் அடுத்த சச்சின் டெண்டுல்கர். அதில் சந்தேகமே தேவையில்லை. கவாஸ்கர் காலத்தில் உருவானார் சச்சின். சச்சின் காலத்தில் நான் வளர்ந்தேன். இப்போது கோஹ்லியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன் என்றார் ஷேவாக்.

100 சதவீத உழைப்பு

100 சதவீத உழைப்பு

கவாஸ்கர் மேலும் கூறுகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 100 சதவீதத்திற்கும் மேலான உழைப்பைக் கொடுத்துள்ளார் கோஹ்லி. கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

எவ்வளவு நிதானம்

எவ்வளவு நிதானம்

இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் எவ்வளவு நிதானமாக ஆடினார் கோஹ்லி. யாராலும் இது முடியாது. மிகப் பெரிய மேதையாக மாறியுள்ளார் கோஹ்லி. யாரையும் இப்படி ஆடி நான் பார்த்ததில்லை என்றார் கவாஸ்கர்.

வாவ்.. சச்சின் பாராட்டு

விராத் கோஹ்லி பெரிதும் மதிக்கும் வீரர் சச்சின்தான். அவரே கோஹ்லியின் ஆட்டத்தைப் பார்த்து நேற்று மிரண்டு விட்டார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறுகையில் "வாவ்.... கோஹ்லி.. சிறப்பானது இது.. மாபெரும் வெற்றி.. மிகப் பெரிய போராட்டம்.. என்று பாராட்டியுள்ளார்.

Story first published: Monday, March 28, 2016, 11:55 [IST]
Other articles published on Mar 28, 2016
English summary
Everyone is hailing Kohli for his sizzling knock in yesterday's match and dubbed him as the next Sachin. And Sachin has expressed his happy over the match result and Kohli's fighing game.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+