அத்தனை வீரர்களிலும் சச்சினே உயர்ந்தவர்.. டேவிட் கேமரூன் பாராட்டு
டெல்லி: இதுவரை இருந்த கிரிக்கெட் வீரர்களியே சச்சின் டெண்டுல்கர்தான் சிறந்தவர் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லியில் இந்திய வர்த்தகர்களுடன் நடந்த கலந்துரையாடலில் பங்கு பெற்றார் கேமரூன். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சச்சினைப் பாராட்டிப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 200வது டெஸ்ட் போட்டியை விளையாடும் சச்சின் டெண்டுல்கரைப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

அனைத்து வீரர்களிலும் இவரே சிறந்தவர். அசாதாரணமான கிரிக்கெட் வீரர். அருமையான ஆட்டக்காரர். அவருக்கு இன்றைய நாள் நல்லதாக அமைய வாழ்த்துகிறேன்.
வெறும் கிரிக்கெட் மட்டும் ஆடுவது முக்கியமல்ல. தொடர்ந்து நிலைத்து ஆடுவதும், சதம் போடுவதும் கூட முக்கியமானது. அதை சச்சின் சரியாக செய்து வந்துள்ளார்.
இளைஞர்கள அவர் வெகுவாக ஈர்த்துள்ளார். இளம் தலைமுறையினருக்கு நல்ல ரோல் மாடலாக திகழ்கிறார். அது பாராட்டுக்குரியது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications