அது ரொம்ப முக்கியம்..இந்தியாவுக்கு கண்டிப்பா உதவும்,அக்ஷருக்கு உத்வேகம் அளித்த சச்சின் வார்த்தைகள்
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மிரட்டி வரும் அக்ஷர் பட்டேலுக்கு சச்சின் கூறியுள்ள வார்த்தைகள் மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி மூலம் அக்ஷர் பட்டேல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அறிமுக ஆட்டங்களிலேயே அவர் பேட்ஸ்மேன்களை பயமுறுத்தி வருகின்றார்.
இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அக்ஷருக்காக தெரிவித்துள்ள வார்த்தைகள் அவரை மேலும் உத்வேகப்படுத்தியுள்ளது.

முதல் டெஸ்ட்
இந்திய அணியில் கடந்த 3 ஆண்டுகளாக வாய்ப்புகாக காத்திருந்த அக்ஷர் பட்டேலுக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதுவும் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அக்ஷருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அக்ஷர் மிரட்டல்
அறிமுக ஆட்டத்திலேயே 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அறிமுக ஆட்டத்தில் 5 விக்கெட்களை எடுத்த 9வது வீரர் ஆவார். இதனை தொடர்ந்து அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் தலா 5 விக்கெட்களை எடுத்து அசத்தினார். இவர் மொத்தமாக அப்போட்டியில் 11 விக்கெட்களை எடுத்தார்.

உத்வேகம்
இது குறித்து பேசியுள்ள சச்சின், அறிமுகமான முதல் 2 போட்டிகளிலேயே விக்கெட்களை அக்ஷர் குவித்து வருகிறார். அவர் இதனை அடுத்த போட்டிகளிலும் தொடர வேண்டும். அது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குள் நுழைய மிக முக்கியமானதாகும். எனவே அக்ஷர் இதே நிலையை தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அஸ்வின்
3வது டெஸ்டில் அக்ஷர் மட்டுமல்லாமல், அனுபவ வீரர் அஸ்வினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்ட்களை பூர்த்தி செய்து அசத்தினார். இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள சச்சின், 400 விக்கெட்கள் என்பது மிகப்பெரும் சாதனையாகும். இன்னும் மேலும் பல சாதனை படையுங்கள் என சச்சின் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications