Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'சில்வர்' சிந்துவுக்கு பி.ம்.டபிள்யூ கார் பரிசு... சச்சின் வழங்குகிறார்

ஹைதராபாத்: ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவிற்கு, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பி.ம்.டபிள்யூ காரை வழங்கி கவுரவப்படுத்த உள்ளார்.

ரியோ ஒலிம்பிக்ஸில் பேட்மிண்டனில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்த பிவி சிந்து, வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் பாராட்டு மற்றும் பரிசு மழையில் நனைந்து வரும் அவருக்கு தற்போது. பி.ம்.டபிள்யூ சொகுசு காரும் தற்போது பரிசாக வழங்கப்படவுள்ளது.

Sachin to present BMW car to Sindhu

சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரும், ஹைதராபாத் பேட்மிண்டன் சங்கத் தலைவருமான சமுதேஷ்வர்நாத் மற்றும் அவரது நண்பர்கள் பி.ம்.டபிள்யூ காருக்கு ஸ்பான்சர் செய்கின்றனர். சச்சின் டெண்டுல்கர் இந்த காரை பி.வி சிந்துவிற்கு வழங்கி கவுரவிக்கவுள்ளார்.

கடந்த லண்டன் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்று நாடு திரும்பிய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலுக்கு, சச்சின் டெண்டுல்கர் பி.ம்.டபிள்யூ காரை வழங்கினார் என்பது நினைவிருக்கலாம். இதேபோல, கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற 19-வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய பேட்மிண்டனில் பட்டம் வென்ற பிவி சிந்துவிற்கு, சச்சின் மாருதி ஸ்விப்ட் காரை வழங்கி கவுரவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 22, 2016, 17:32 [IST]
Other articles published on Aug 22, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+