சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை எதிர்த்த மனு தள்ளுபடி!
சென்னை: சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக கால்நூற்றாண்டுகாலம் விளையாடி சாதனைகள் படைத்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இது பெரும் சர்ச்சயை உருவாக்கியது.

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை எதிர்த்து வழக்கறிஞர் கனகசபை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசும், சச்சினுக்கு என்ன அடிப்படையில் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது என்பதை விரிவாக விளக்கி ஒரு பதிலைத் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து இன்று வழக்கறிஞர் கனகசபை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Click it and Unblock the Notifications