Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் தலைகீழாத்தான் சொல்லுவேன்... சேவாக்கிற்கு வித்தியாசமாக வாழ்த்து சொன்ன சச்சின்!

டெல்லி: இன்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக்கின் பிறந்த நாள் ஆகும்.இன்றோடு அவருக்கு 39 வயது ஆகிறது. அவர் தனது பிறந்தநாளை டெல்லியில் கொண்டாடி வருகிறார்.

இன்று அவரது பிறந்த நாள் என்பதால் கிரிக்கெட் வீரர்களும் , பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று முழுக்க அவர் டிவிட்டர் வாழ்த்து மழையால் நனைந்து வருகிறார்.

இதையடுத்து இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் , சேவாக்கிற்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் இந்த வித்தியாசமான வாழ்த்து டிவிட்டர் முழுக்க வைரல் ஆகியுள்ளது.

சேவாக்கிற்கு பிறந்த நாள்

சேவாக்கிற்கு பிறந்த நாள்

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், பல அதிரடிக்கு சொந்தக் காரருமான வீரேந்திர சேவாக்கிற்கு இன்று பிறந்த நாள் ஆகும். 1978ல் டெல்லியில் ஒரு சிறிய பகுதியில் இவர் பிறந்தார். இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி பல சாதனைகள் இவர் படைத்து இருக்கிறார். டிவிட்டரில் மிகவும் சிறப்பாக இயங்கி வரும் இவருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் மொத்த டிவிட்டர் உலகமே இவரை வாழ்த்திக் கொண்டு இருக்கிறது. சேவாக் பொதுவாக டிவிட்டரில் வித்தியாசமாக பேசுவார் என்பதால் அவருக்கு வரும் வாழ்த்து டிவிட்டுகளும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

ஸ்பார்ட்டன்ஸ் போஸ்டரில் சேவாக்

பாலிவுட் சினிமா உலகின் பிரபல தயாரிப்பாளரான அதுல் கஷ்பெக்கர் இந்த டிவிட்டை எழுதி இருக்கிறார். இதில் அவர் பிரபல ஸ்பார்ட்டன்ஸ் படத்தின் போஸ்டரை எடிட் செய்து அதில் சேவாக்கின் தலையை வைத்து போட்டோஷாப் செய்து இருக்கிறார். அந்தப்படத்தின் ஹீரோ எப்படி அவர்களது நண்பர்கள் அனைவரையும் காப்பாற்றுவானோ அப்படித்தான் சேவாக் பலமுறை இந்திய அணியை காப்பாற்றியதாக கூறியுள்ளார்.

ரெய்னாவின் பிறந்தநாள் வாழ்த்து

இந்த நிலையில் இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரரான ரெய்னா வித்தியாசமான டிவிட் ஒன்று செய்துள்ளார். இதில் அவர் சேவாக்கை 100எம்பி எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது 100எம்பி வேகத்தில் மொபைலில் டவுன்லோட் செய்வது போல சேவாக் மிக வேகமாக விளையாடக் கூடியவர் என காமெடியாக கூறியுள்ளார். இவரைப் போலவே விவிஎஸ் லக்ஷ்மன், கம்பிர், கோஹ்லி என பலர் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.

சச்சினின் வித்தியாசமான வாழ்த்து

அனைவரும் ஓர் அளவுக்கு வித்தியாசமாக வளைத்து கூறியிருந்தாலும் சச்சின் குறித்துதான் மிகவும் வித்தியாசமான வாழ்த்து ஆகும். இதில் வாழ்த்து தெரிவிக்க வந்த சச்சின் "நான் தல கில்லட்த்தான் குதிப்பேன்'' என்பது போல "நான் தலைகீழாகத்தான் வாழ்த்து சொல்வேன்" என் வாழ்த்தியிருக்கிறார். மேலும் "எப்போது நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே தலைகீழாக செய்யம் சேவாக்கிற்கு வேறு எப்படி வாழ்த்து கூறுவது" என அந்த டிவிட்டில் எழுதி இருக்கிறார்.

Story first published: Friday, October 20, 2017, 16:40 [IST]
Other articles published on Oct 20, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+