எப்பவுமே சச்சின்தான் என்னோட நம்பர் 1 பேவரைட்... இது ரிச்சர்ட்ஸ் லிஸ்ட்!
துபாய்: மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தனக்குப் பிடித்த 10 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கருக்கு முதலிடம் கொடுத்துள்ளார். கூடவே, எப்போதுமே எனது நம்பர் 1 பேவரைட் சச்சின்தான் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் ரிச்சர்ட்ஸ்.
இந்தப் பட்டியலில் சச்சின் தவிர ஷேவாக், கோஹ்லி ஆகிய இன்னும் இரு இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசியின் இணையதளத்தில் ரிச்சர்ட்ஸின் இந்தப் பட்டியல் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ரிச்சர்ட்ஸ் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு திறமை
ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமான திறமையை உலகம் கண்டுள்ளது. இதில் யாரையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது கடினமானதும் கூட.

எனக்குப் பிடித்த 10 பேர்
எனக்குப் பிடித்த 10 பேரை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். இவர்கள் ஆல் டைம் பெஸ்ட் வீரர்கள் ஆவர். அதில் முதலில் எனக்கு நினைக்கு வந்தவர் சச்சின்தான்.

சச்சின் மிகப் பெரிய ஜாம்பவான்
சச்சினை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் மிகப் பெரிய ஜாம்பவான் அவர். அவரன்றி ஓர் அணுவும் அசையாது என்பது போல சச்சின் இல்லாமல் ஒரு அணியை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

சச்சினைச் சேர்க்காவிட்டால் அவமானம்
சச்சினை டாப் 10 வீரர்களில் சேர்க்காவிட்டால் அது அவமானமாகும். எப்போதுமே சச்சினை எனக்குப் பிடிக்கும். அவர் விளையாடுவதைப் பார்க்க காசு கொடுத்து ஸ்டேடியத்திற்குப் போக எப்போதுமே நான் தயார்.

சின்ன உருவத்தில் பெரிய சாதனை
அவர் உருவம் சின்னதாக இருக்கலாம். ஆனால் அத்தனை பெரிய சாதனைகளையும் இவர் தன்னகத்தே கொண்டுள்ளார். அருமையான பேட்ஸ்மேன் அவர் என்று கூறியுள்ளார் ரிச்சர்ட்ஸ்.

2 வது இடத்தில் லாரா
சச்சினைப் போலவே மேற்கு இந்தியத் தீவுகளுக்குக் கிடைத்த சூப்பர்ப் வீரர் பிரைன் லாரா. அவரை 2வது இடத்தில் வைத்துள்ளார் ரிச்சர்ட்ஸ். 3வது இடத்தில் கிறிஸ் கெய்ல், 4வது இடத்தில் கிளைவ் லாயிட் என மேலும் இரு மேற்கு இந்தியத் தீவுகள் ஜாம்பவான்களுக்கு இடம் கொடுத்துள்ளார் ரிச்சர்ட்ஸ்.

5வது இடத்தில் பான்டிங்
ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பான்டிங் 5வது இடத்தில் வருகிறார். 6வது இடத்தில் மாத்யூ ஹெய்டன் இருக்கிறார்.

7வது இடம் ஷேவாக்குக்கு
வீரேந்திர ஷேவாக்குக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸ்ஸி 8வது இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் ஏப் டிவில்லியர்ஸ் 9வது இடம் பிடித்துள்ளனர்.

10வது இடத்தில் விராத் கோஹ்லி
இந்தியாவின் அதிரடி வீரர் விராத் கோஹ்லிக்கு 10வது இடத்தைக் கொடுத்துள்ளார் ரி்ச்சர்ட்ஸ்.

ஷேவாக்குக்கு புகழாரம்
ஷேவாக் குறித்து ரிச்சர்ட்ஸ் கூறுகையில், மாத்யூ ஹெய்டனுடன், ஷேவாக்கை ஒப்பிடலாம். அருமையான அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக். சில ஓவர்களில் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர். அதி வேகமாக ஆடக் கூடிய வல்லமை படைத்தவர். அவர் நின்று விட்டால், எதிரில் யார் பந்து வீசினாலும் சிக்கல்தான்.

ஜாலியாக விளையாடக் கூடியவர்
ஏதோ பார்க்கில் வாக்கிங் போவதைப் போல அவர் கேஷுவலாக விளையாடுவதைப் பார்க்கவே அவ்வளவு அற்புதமாக இருக்கும். ஷேவாக் நன்றாக விளையாடி விட்டால் போதும், பின்னால் வருகிறவர்களுக்கு வேலை சுலபமாகி விடும் என்று கூறியுள்ளார் ரிச்சர்ட்ஸ்.

செம வீரர் கோஹ்லி
விராத் கோஹ்லி குறித்து அவர் கூறுகையில், கடைசிப் பெயராக இருக்கிறது என்பதற்காக இவர் யாருக்கும் குறைந்தவர் இல்லை. மிகவும் இளம் வீரரான கோஹ்லி, பல ஆச்சரியங்களை தனக்குள் வைத்திருப்பவர். நிறைய சாதனைகளைப் படைக்கப் போகிறார். மிகவும் நம்பிக்கையுடன் ஆடக் கூடியவர். டெஸ்ட் போட்டிகளை விட ஒரு நாள் போட்டிகளில் சாதனைகளை படைத்து வருபவர் என்று பாராட்டியுள்ளார் ரிச்சர்ட்ஸ்.


Click it and Unblock the Notifications