For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பை அணியை விட்டு விலகும் அர்ஜூன் டெண்டுல்கர்.. வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி.. என்ன நடக்கிறது?

மும்பை: மும்பை என்றாலே நம் மனதுக்கு முதலில் வரும் பெயர் சச்சின் டெண்டுல்கர் தான். மும்பையின் அடையாளமாக சச்சின் திகழ்கிறார்.

மும்பை: மும்பை என்றாலே நம் மனதுக்கு முதலில் வரும் பெயர் சச்சின் டெண்டுல்கர் தான். மும்பையில் அடையாளமாக சச்சின் திகழ்கிறார்.

இது வாழை அடி வாழையாக தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம், சச்சின் மகனும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால், தந்தையில் சாதனையை போல் அவரும் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

சச்சினின் மகன் என்பதால் வாய்ப்பும் தேடி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது தான் ஐஏஎஸ் தேர்வை கூட தேர்ச்சி பெற்றுவிடலாம், கிரிக்கெட் அணியில் இடம் கிடைப்பது அவ்வளவு கடினமாகி விட்டதே.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

பாட்ஷா படத்தில் எப்படி விஜய குமார், தனது மகன் ரஜினியை பார்த்து இந்த பாட்ஷா வேண்டாம், மும்பை வேண்டாம் என்று சொல்வாரோ, அதே போல் சச்சினும் சொல்லிவிட்டார் போல. அதனால் மும்பை அணியை விட்டு விலகும் முடிவை எடுத்துள்ளார் அர்ஜூன் டெண்டுல்கர். காரணம், ஐபிஎல் தொடரிலும் சரி, ரஞ்சி அணியிலம் சரி, மும்பை அணியில் இடம் பிடித்தும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை.

விண்ணப்பம்

விண்ணப்பம்

இதனால் விரக்தி அடைந்துள்ள அர்ஜூன் மும்பை அணியை விட்டு விலகி, ரஞ்சி போட்டியில் வேறு மாநிலத்திற்காக சென்று விளையாட தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ரஞ்சி போட்டியில் விளையாடினால் மட்டுமே அடுத்தடுத்து தொடர்களில் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பெஞ்சிலேயே அமர வைக்கப்பட்டால் எப்படி ?

கோவா அணி அழைப்பு

கோவா அணி அழைப்பு

இதனால், மும்பை அணியை விட்டு விலகி கோவா அணியில் விளையாட அர்ஜூன் டெண்டுல்கர் முடிவு எடுத்துள்ளார். இதற்கு காரணம், கோவா அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரும், ஒரு பேட்ஸ்மேனும் தேவை. இதனால், அர்ஜூனை பயன்படுத்த மிகவும் ஆவலுடன் இருக்கிறோம் என்று கோவா கிரிக்கெட் சங்கத் தலைவர் சூரஜ் கோதிக்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

Recommended Video

CSK, MI-யின் பெரிய Announcement! CSA T20-க்கு தயார் | Aanee's Appeal
முதல் முறை அல்ல

முதல் முறை அல்ல

இதன் மூலம் மும்பையை விட்டு அர்ஜூன் டெண்டுல்கர் செல்வது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதே போல் நடப்பது இது முதல் முறை அல்ல. மும்பை கிரிக்கெட் அணியின் தூணாக இருந்த சுனில் கவாஸ்கரின் மகள், ரோகன் கவாஸ்கருக்கும் மும்பை அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் பெங்கால் அணிக்காக ரஞ்சியில் விளையாடி இந்திய அணியிலும் இடம் பிடித்தார். தற்போது அதே வழியை சச்சின் மகனும் பின்பற்ற உள்ளார்.

Story first published: Thursday, August 11, 2022, 19:52 [IST]
Other articles published on Aug 11, 2022
English summary
Sachin son Arjun Tendulkar plans to Leave Mumbai team in domestic cricket மும்பை அணியை விட்டு விலகும் அர்ஜூன் டெண்டுல்கர்.. வாய்ப்ப கிடைக்காததால் விரக்தி.. என்ன நடக்கிறது?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X