Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு மும்பை அணியில் இடம்- ரஞ்சி கோப்பைக்கு முதல் முறை தேர்வு

மும்பை: பி.சி.சி.ஐ. நடத்தும் பிரதான உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடரில் 38 அணிகள் பங்கேற்கிறது. இதில் மும்பை அணி சி பிரிவில் மகாராஷ்டிரா, சர்வீஸ் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை அணியின் கேப்டனாக பிரித்வி ஷா முதல் முறையாக களமிறங்குகிறார்

அர்ஜூன் டெண்டுல்கர்

அர்ஜூன் டெண்டுல்கர்

ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் முதல் முறையாக சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். 22 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் தந்தை போல் இல்லாமல், நல்ல உயரமாகவும், இடதுகை பேட்ஸ்மேன், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என ஆல் ரவுண்டராக விளங்குகிறார்.

அர்ஜூன் செயல்பாடு

அர்ஜூன் செயல்பாடு

ரஞ்சி கோப்பையில் இது முதல் முறை என்றாலும், சையது முஸ்தாக் அலி கோப்பை டி20 தொடரில் மும்பை அணிக்காக அர்ஜூன் டெண்டுல்கர் ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஹரியானாஅணிக்காக களமிறங்கிய அவர் மூன்று ஓவர் வீசி 1 விக்கெட்டுகளை எடுத்து 34 ரன்கள் விட்டு கொடுத்தார்.புதுச்சேரி அணிக்கு எதிரான 2வது ஆட்டத்தில் 4 ஓவர் வீசி ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றி 33 ரன்களை விட்டு கொடுத்தார்

ஐ.பி.எல். தொடர்

ஐ.பி.எல். தொடர்

கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் அர்ஜூன் டெண்டுல்கரை எந்த அணியும் முதலில் தேர்வு செய்யவில்லை. பின்னர் ஏலம் முடியும் தருவாயில் மும்பை அணி அவரை 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது. ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. சச்சினின் மகன் என்பதால் தான் இந்த ரஞ்சி வாய்ப்பு என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அர்ஜூன் சிறப்பாக விளையாடுகிறார் என்பதால் தான் அணியில் தேர்வாகி உள்ளதாக மும்பை அணியின் தேர்வுக்குழுத் தலைவர் சலில் அங்கோலா தெரிவித்துள்ளார்.

Recommended Video

இந்திய அணியில் Sachin-க்கு புதிய பொறுப்பு - Sourav Ganguly | Oneindia Tamil
41 முறை சாம்பியன்

41 முறை சாம்பியன்

மும்பை அணிக்கு முதல் முறையாக பிரித்வி ஷா தலைமை தாங்குகிறார். மும்பை அணியில் சர்ஃபிராஸ் கான்,அர்மான் ஜாபர்,ஜெய்ஷ்வால், சிவம் துபே , அமான் கான் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 41 முறை சாம்பியனான மும்பை அணி வரும் 13ஆம் தேதி தனது முதல் போட்டியில் மகாராஷ்டிராவுடனும், 20ஆம் தேதி டெல்லி அணியுடனும் மோதுகிறது

Story first published: Thursday, December 30, 2021, 0:56 [IST]
Other articles published on Dec 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+