For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்தோட விளையாட சொன்னா.. தெரு நாயோட விளையாடி இருக்காரு.. அர்ஜூன் டெண்டுல்கருக்கு நாய் கடி

மும்பை : சமீபகாலமாக தெரு நாய்கள் கடித்து பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்துள்ளது.உத்தர பிரதேசத்தில் வாக்கிங் சென்ற மருத்துவர் நாயால் கடித்து கடந்த மாதம் கொல்லப்பட்டார். இதேபோன்று ஹைதராபாத்தில் நான்கு வயது குழந்தை நாய் கடித்து உயிர் இழந்தது.

இதனால் நாய் தொல்லையை தடுக்க வேண்டும் என பல்வேறு பகுதிகளில் கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் அதே வேளை பீட்டா போன்ற அமைப்புகள் நாய்களை பிடிக்கக் கூடாது என கோரிக்கைகளை எழுப்பி வருகின்றன.

Sachin son arjun tendulkar was bitten by stray dogs ahead of mi vs lsg match

தற்போது இந்த நாய் தொல்லை சச்சின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் இந்த சம்பவம் கொஞ்சம் வித்தியாசமாக நடைபெற்று இருக்கிறது. எப்போதுமே சிலர் நாயுடன் விளையாடுவதை பொழுது போக்காகவே வைத்திருப்பார்கள். பின்னர் நாயுடன் விளையாடுவதை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு லைக்குகளை வாங்குவதற்காகவே சிலர் இந்த பணியை செய்வார்கள்.

இந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் விளையாடி கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவருடைய பந்துவீச்சின் வேகத்தை அதிகரிக்க ரோகித் சர்மா அறிவுறுத்தியதால் அதற்கான பயிற்சியில் ஈடுபட அர்ஜூன்க்கு அட்வைஸ் தரப்பட்டது. இந்த நிலையில் பந்துடன் அர்ஜுன் விளையாடாமல் தெருவில் சென்ற நாயை பிடித்து அதனை கொஞ்சி விளையாடி இருக்கிறார்.

Sachin son arjun tendulkar was bitten by stray dogs ahead of mi vs lsg match

வீட்டில் இருந்த நாயாக இருந்தால் அது அமைதியாக இருந்திருக்கும். தெரு நாயை கொஞ்சினால் அது சும்மா விடுமா. அர்ஜுன் கையை அது கடித்து விட்டது. இதில் காயமடைந்த அர்ஜூன் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுள்ளார்.இதனால் அர்ஜுன் டெண்டுல்கர் பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

அர்ஜூன் டெண்டுல்கர் எதற்கு தெரு நாய் உடன் விளையாடினார் என்று கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது. இதனால் நாயுடன் போட்டோ எடுக்கிறேன் நாய்க்கு பிஸ்கட் போடுகிறேன் என்ற பெயரில் இதுபோன்று கடி வாங்கிக் கொண்டு வந்து விடாதீர்கள் என பலரும் அர்ஜுன் டெண்டுல்கரை காட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Tuesday, May 16, 2023, 18:35 [IST]
Other articles published on May 16, 2023
English summary
Sachin son arjun tendulkar was bitten by stray dogs ahead of mi vs lsg match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+