சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் திருமணம் கோலாகலம்.. தோனியின் செயலால் ரசிகர்கள் ஆச்சரியம்
மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், ஆல்-ரவுண்டருமான அர்ஜுன் டெண்டுல்கர், தொழிலதிபர் சானியா சந்தோக்கை மும்பையில் நடைபெற்ற கோலாகலமான விழாவில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ். தோனி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அர்ஜுன் டெண்டுல்கரும், சானியா சந்தோக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். உள்நாட்டு கிரிக்கெட் அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத வீரராக வலம் வரும் அர்ஜுன், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு டிரேட் ஆகியுள்ளார். கோவா அணிக்காக விளையாடி, திறமையான பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக தனக்கென ஒரு தனி அடையாளத்தை செதுக்கியுள்ளார்.

சானியா சந்தோக், புகழ்பெற்ற குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒரு வெற்றிகரமான இளம் தொழிலதிபர் ஆவார். மும்பையின் பிரபல தொழிலதிபர் ரவி காயின் பேத்தியான இவர், டெண்டுல்கர் குடும்பத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலமாகவே டெண்டுல்கர் குடும்பத்துடன் நெருங்கிய நட்பில் சானியா இருந்து வருகிறார்.
திருமண விழாவில், மணமகளின் தந்தை சச்சின் டெண்டுல்கர், மணமக்கள் மீது மலர்களைத் தூவி, புன்னகையுடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். டெண்டுல்கர் தனது மகனின் திருமணத்தில் அளவற்ற மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இந்த அன்பான தருணம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி, தனது மனைவி சாக்ஷியுடன் திருமண விழாவில் கலந்து கொண்டார். பொதுவாக தனது கைபேசியை அதிகம் பயன்படுத்தாதவர் என்று அறியப்படும் தோனி, விழாவின்போது தனது கைபேசியை கைகளில் வைத்திருந்த அரிய காட்சி சமூக வலைத்தளங்களில்6
திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற மெஹந்தி மற்றும் சங்கீத் விழாக்களும் களைகட்டின. அர்ஜுனின் சகோதரி சாரா டெண்டுல்கர், சங்கீத் விழாவில் ஆனந்தமாக நடனமாடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. மணமக்கள் அர்ஜுன் மற்றும் சானியா, Pre-wedding கொண்டாட்டங்களில் தந்த நிற உடைகளில் தோன்றிய விதம், பலரின் பாராட்டைப் பெற்றது.
திருமணத்திற்கு முந்தைய விழாக்களில், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, பிரகாசமான ஊதா நிறத்தில் வடிவமைக்கப்பட்ட ஆடை மற்றும் விலைமதிப்பற்ற போல்கி வைர ஆபரணங்களுடன் பங்கேற்று விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தார். பிரபல ஆடையலங்கார நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த ஆடைகள், அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட நாட்டிலுள்ள பல உயர்மட்ட தலைவர்களுக்கும் அர்ஜுன் டெண்டுல்கர்-சானியா சந்தோக் திருமணத்தற்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருந்தன. பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரும் இந்த மகிழ்ச்சி மிகுந்த நிகழ்வில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications