Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின்-கங்குலிக்கு வாழ்நாள் முழுவதும் 'ஓசி' பாஸ்!

Sachin and Ganguly
கொல்கத்தா: சச்சின் டெண்டுல்கர், கங்குலிக்கு வாழ்நாள் முழுவதும் ரயிலில் இலவசமாக பயணம் செய்ய பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வாழ்நாள் முழுவதும் ரயிலில் ஓசி பயணம் மேற்கொள்ளலாம்.

இந்த பாஸ்களை நேற்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி இருவரிடமும் வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கங்குலி ஆகியோர் கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவையையும், சாதனைகளையும் பாராட்டி இந்த ரயில்வே இலவச பாஸ் வழங்கப்படுகிரது.

ஏசி முதல் வகுப்பில் இரு வீரர்களும் தங்களது குடும்பத்தினருடன் இலவசமாக பயணம் செய்யலாம். இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டுக்கும் மாபெரும் சேவையாற்றியுள்ளனர்.

டெண்டுல்கரால் நாட்டுக்கு மேலும் பல பெருமைகள் சேரும் என நம்புகிறேன், வாழ்த்துகிறேன் என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:34 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+