Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்பஜன் போட்ட தூஸ்ரா.. சிக்சர் அடித்தார் சச்சின்!

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் எப்படி அசத்தலாக விளையாடுவார்களோ அதுபோலவே, சமூகதளங்களிலும் பின்னி பெடலெடுத்து வருகின்றனர்.

இந்தியா, இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். ஜேம்ஸ் ஆன்டர்சனின் அவுட்ஸ்விங்கில் ஆட்டமிழந்தார்.

முரளி விஜய் அவுட்டாகும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, இதுபோன்ற பந்தை எப்படி விளையாட வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கரை கேள்வி கேட்டுள்ளார் ஹர்பஜன் சிங்.

அதற்கு சச்சின் சொன்ன பதில் சூப்பரோ சூப்பர். உங்களுடைய தூஸ்ரா பந்தில் அவுட்டானவர்களும் இதே கேள்வியை என்னிடம் கேட்டுள்ளனர் என்று ஹர்பஜனுக்கு சச்சின் பதிலளித்துள்ளார்.

Story first published: Saturday, August 11, 2018, 16:48 [IST]
Other articles published on Aug 11, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+