Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை குண்டு வெடிப்பு அன்று இந்திய அணிக்கு என்ன நடந்தது... சச்சின் வெளியிட்ட உண்மை!

மும்பை: மும்பை குண்டு வெடிப்பு இந்தியாவின் கிரிக்கெட் போட்டியை எப்படி எல்லாம் மாற்றியது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். மும்பை குண்டு வெடிப்பின் போது இந்திய அணி இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர் விளையாடிக் கொண்டு இருந்தது.

இந்த குண்டுவெடிப்பு காரணமாக அந்த தொடர் அதிகம் பாதிக்கப்பட்டது. மேலும் இந்திய வீரர்களின் மனநிலையும் பாதிக்கப்பட்டது.

தற்போது இந்திய வீரர் சச்சின் அந்த நினைவுகள் அனைத்தையும் பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.

தீவிரவாத தாக்குதல்

தீவிரவாத தாக்குதல்

மும்பையில் தீவிரவாதிகள் 2008 நவம்பர் 26ம் தேதி அன்று தாக்குதல் நடத்திய போது இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டு இருந்தது. முதல் நாள் போட்டி முடிந்த பின்புதான் தாக்குதல் நடந்த விஷயம் கட்டாக் மைதானத்தில் இருந்த இருநாட்டு வீரர்களுக்கும் தெரியும். அதுவும் முழுதாக தீவிரவாத தாக்குதல் என்று தெரியாது. இதனால் அந்த போட்டி பாதியில் கை விடப்பட்டது.

சச்சின்

சச்சின்

தற்போது அந்த சம்பவத்தை சச்சின் டெண்டுல்கர் நினைவு கூர்ந்துள்ளார். அதில் ''அன்று எங்களுக்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவமே தெரியாது. முதலில் 'கேங் வார்' என்றுதான் டிவியில் கூறினார்கள். பின்புதான் தீவிரவாத தாக்குதல் என்று தெரியும். அன்று முழுக்க எங்களால் தூங்க முடியவில்லை. மறுநாள் போட்டி ரத்தானது. இங்கிலாந்து அணி மீண்டும் நாட்டிற்கு திரும்பி சென்றது'' என்று கூறியுள்ளார்.

ஒரு வாரம் என்ன நடந்தது

ஒரு வாரம் என்ன நடந்தது

அதற்கு அடுத்த ஒருவாரம் என்ன நடந்தது என்றும் சச்சின் கூறியுள்ளார். அதில் ''அந்த தாக்குதல் மூன்று நாட்கள் நடந்தது. அந்த ஒருவாரம் எங்களால் சரியாக தூங்கவே முடியவில்லை. அதன்பின் இங்கிலாந்து அணியை சமாதானபடுத்தி மீண்டும் போட்டிக்கு அழைத்தோம். முதல் டெஸ்ட் போட்டியை சென்னையில் நடந்த முடிவு எடுத்தோம். மிகவும் கடினமான மனநிலையுடன் போட்டிக்கு சென்றோம்'' என்று கூறியுள்ளார்.

இந்தியா கற்றுக்கொண்டது

இந்தியா கற்றுக்கொண்டது

மும்பை குண்டுவெடிப்பு நடந்த பின் முதல் டெஸ்ட் நடந்தது. அதுகுறித்து கூறிய சச்சின் ''அந்த போட்டி எங்களுக்கு சவாலாக இருந்தது. 387 ரன்களை இரண்டாவது இன்னிங்ஸில் எடுங்க வேண்டி இருந்தது. ஆனால் மும்பை குண்டுவெடிப்பில் பாதுகாத்த ராணுவ வீரர்களின் செயல்பாடு எங்களுக்கு பெரிய உத்வேகத்தை அளித்தது'' என்று கூறியுள்ளார். அந்த போட்டியில் சச்சினின் அதிரடியால் இந்திய வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 29, 2017, 13:48 [IST]
Other articles published on Nov 29, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+