For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் 194 ரன்கள் எடுத்திருந்த போது டிராவிட் டிக்ளேர் செய்த விவகாரம்.. டிரஸிங் ரூமில் நடந்தது என்ன?

மும்பை : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த வீரர்கள் அனைவரும் சதம் அடித்ததுடன் நிறுத்தி விடாமல் பெரிய ஸ்கோர் சேர்த்து ஆட்டம் இழப்பதே வழக்கமாக வைத்துக் கொள்வார்கள். கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அழைக்கப்படும் டான் பிராட்மேன், இதுவரை 12 முறை இரட்டை சதம் அடித்திருக்கிறார்.

அதன் பிறகு இலங்கை வீர சங்ககாரா 11 முறை இரட்டை சதம் அடித்திருக்கிறார்.இந்திய வீரர்களில் அதிக முறை இரட்டை சதம் அடித்திருப்பது, விராட் கோலி தான். கோலி ஏழுமுறை அடித்திருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக சேவாக், சச்சின் ஆகியோர் தலா ஆறுமுறையும் டிராவிட் ஐந்து முறையும் இரட்டை சதம் அடித்திருக்கிறார்.

india vs bangladesh ind vs ban virat kohli

இந்த சூழலில் சச்சின் 7வது முறையாக இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தது. ஆனால் ராகுல் டிராவிட் செய்த ஒரு தவறால் அது நடக்காமல் போனது.
20 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது. அந்தத் தொடரில் கங்குலி ஒருநாள் கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்தார்.

அப்போது ஒரு நாள் போட்டிகளில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து கங்குலி விலகினார். ஆனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் தான் இருந்தார். இதன் காரணமாக ராகுல் டிராவிட் அப்போது கேப்டனாக செயல்பட்டார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 675 ரன்கள் குவித்தது. குறிப்பாக இரண்டாவது நாள் இறுதியில் இந்தியா விளையாடிக் கொண்டிருந்தபோது சச்சின் டெண்டுல்கர் 194 ரன்கள் களத்தில் இருந்தார்.

அப்போது இரட்டை சதம் அடிக்க 6 ரன்கள் மட்டும் தேவைப்பட்டது. இதனால் சச்சின் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று ராகுல் டிராவிட் டிக்லர் செய்து கொண்டார். பாகிஸ்தான் விக்கெட்டை, இருக்கும் கொஞ்சம் ஓவர்களில் வீழ்த்து விட வேண்டும் என டிராவிட்டின் எண்ணம் நிறைவேறவில்லை என்றாலும் சச்சின் இரட்டை சதம் அடித்ததை டிராவிட் தடுத்துவிட்டார் என பெரிய சர்ச்சை வெடித்தது.

அப்போது சச்சின் டெண்டுல்கர் தாம் கண்டதை கண்களால் நம்ப முடியாமல் பெரும் ஏமாற்றத்துடன் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றார். அப்போது சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் இடையே பெரும் மோதல் இருந்ததன் காரணமாக டிராவிட் பழி வாங்கிவிட்டார் என்றெல்லாம் தகவல் வெளியானது. இந்த நிலையில் அந்த சம்பவத்திற்கு பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்பது குறித்து அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஆகாஷ் சோப்ரா, தற்போது முதல் முறையாக தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து வீடியோ ஒன்றில் பேசிய ஆகாஷ் சோப்ரா, தாம் அந்த ட்ரெஸ்ஸிங் ரூமில் தான் இருந்தேன். ஆனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் வீரர்கள் யாரும் பெரிய அளவில் பேசிக்கொள்ளவில்லை. அப்போது சில உரையாடல்கள் மூத்த வீரர்களுக்கு இடையே நடந்தது. நான் மிகவும் இளம் வீரர் என்பதால் அந்த உரையாடலுக்குள் நான் செல்லவில்லை. சச்சின் மிகவும் ஏமாற்றத்துடன் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வந்தார். அவர் இவ்வளவு ஏமாற்றம் மற்றும் சோகமாக இருந்து நான் என்றுமே பார்த்ததில்லை.

அவர் எப்போதும் கோபப்பட மாட்டார் அந்த சம்பவத்துக்கு பிறகும் சச்சின் கோபமாக இல்லை. ஆனால் மிகவும் ஏமாற்றத்துடன் காணப்பட்டார். சச்சினை பார்க்கும்போது ஏதோ சரி இல்லை என்ற ஒரு நினைப்பு தான் தெரிந்தது. ராகுல் டிராவிட் தான் கேப்டன் ஆக இருந்தார். ஆனால் கங்குலியும் டிரெஸ்ஸிங் ரூமில் அப்போது இருந்தார். அந்தப் போட்டியில் அவருக்கு காயம் காரணமாக விளையாடவில்லை. ஆனால் ராகுல் டிராவிட் முடிவுக்கு பின்பு கங்குலியும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருப்பார்.

ஆனால் இது கேப்டனின் முடிவு கிடையாது. சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் எடுத்த முடிவாக தான் இருக்கும். இந்த போட்டி நான்கு நாட்களில் முடிவடைந்தது. இது குறித்து டிராவிட் பேசும் போது ஆட்டம் நான்கு நாட்கள் முடிவடைந்து இருந்தால், நான் நிச்சயம் டிக்ளேர் செய்திருக்க மாட்டேன் என்று அப்போது கூறினார். ராகுல் டிராவிட் எடுத்த முடிவில் பலருக்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் டிராவிட்டின் முடிவை யாரும் சந்தேகப்படக் கூடாது. அதே ஒரு சூழ்நிலையில் டிராவிட்டும் இருந்திருந்தால், நிச்சயம் அவரும் இந்த முடிவை தான் எடுத்திருப்பார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அந்த போட்டியில் இந்திய அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் பாகிஸ்தான் மண்ணில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஒரு விக்கெட்டையும் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, September 17, 2024, 9:01 [IST]
Other articles published on Sep 17, 2024
English summary
Sachin Tendulkar 194 Runs Declaration - Why Dravid did this - Akash chopra reveals behind the scene சச்சின் 194 ரன்கள் எடுத்திருந்த போது டிராவிட் டிக்ளேர் செய்த விவகாரம்.. டிரஸிங் ரூமில் நடந்தது என்ன?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+