Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் சொல்லித்தான் டோணியை கேப்டனாக்கினோம்.. சொல்கிறார் பவார்

மும்பை: 2007ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரைத் தேடித்தான் கேப்டன் பதவி வந்தது. ஆனால் அவர்தான் டோணிக்கு அதைக் கொடுக்குமாறு அறிவுறுத்தினார் என்று கூறியுள்ளார் சரத் பவார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரான பவார் தனது பிளாக்கில் இதைத் தெரிவித்துள்ளார்.

தற்போது மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கிறார் பவார். இதுகுறித்து பவார் அளித்துள்ள பேட்டி....

அடுத்தவருக்கு உதவுவதில் ஐயாவைப் போல..

அடுத்தவருக்கு உதவுவதில் ஐயாவைப் போல..

அடுத்தவருக்கு உதவுவதில் சச்சினுக்கு நிகர் சச்சின்தான். குறிப்பாக இளம் வீரர்களு கை கொடுப்பதில் அவருக்கு நிகர் யாருமே இல்லை. குழுவாக அணியை விளையாட வைப்பதில் கெட்டிக்காரர். மனிதாபிமானம் மிக்கவர்.

விளையாடுவதற்காக பதவியை உதறியவர்

விளையாடுவதற்காக பதவியை உதறியவர்

தான் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காகவே கேப்டன் பதவியை ஏற்க மறுத்தவர் சச்சின்.

டோணிக்கு ஆதரவு கொடுத்தவர்

டோணிக்கு ஆதரவு கொடுத்தவர்

டோணி மற்றும் சச்சின் ரசிகர்களுக்கு நான் சொல்லப் போகும் இந்த செய்தி மகிழ்ச்சி தரும். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. இந்திய கிரிக்கெட் அணி அப்போது இங்கிலாந்தில் ஆடிக் கொண்டிருந்தது. நானும் லண்டனில்தான் இருந்தேன்.

ராகுல் என்னிடம் வந்தார்

ராகுல் என்னிடம் வந்தார்

ராகுல் டிராவிட் என்னிடம் வந்தார். தான் கேப்டன் பதவியிலிருந்து விலக விரும்புவதாக என்னிடம் தெரிவித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதெல்லாம் கிடையாது தொடருங்கள் என்றேன்.

சச்சினிடம் பேசினேன்

சச்சினிடம் பேசினேன்

இதையடுத்து நான் சச்சினிடம் பேசினேன். ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லை. மாறாக டோணியை வேண்டுமானால் கேப்டனாக்குங்கள் என்றார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சிறப்பாக செயல்பட முடியுமா..

சிறப்பாக செயல்பட முடியுமா..

டோணி சிறந்த விக்கெட் கீப்பர். ஆனால் அவரால் கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியுமா என்று சச்சினிடம் கேட்டேன். அதற்கு சச்சின், முயற்சித்துப் பாருங்கள். சிறந்த கேப்டனாக அவர் வருவார். பொறுப்புணர்வுடன் இதை நான் கூறுகிறேன் என்றார்.

சச்சின் சொன்னது பலித்தது

சச்சின் சொன்னது பலித்தது

சரி என்று சச்சின் கூற்றை ஏற்று தேர்வுக் குழு டோணியை கேப்டனாக்கியது. அவர் இந்தியாவுக்குப் பெருமை தேடிக் கொண்டு வந்தார். 20-20 உலகக் கோப்பையை டோணி தலைமையில் வென்றோம். 2011ல் உலகக் கோப்பையையும் வென்றோம்.

சச்சினின் தொலைதூரப் பார்வையால் இது சாத்தியமானது என்று கூறியுள்ளார் பவார்.

Story first published: Sunday, November 10, 2013, 15:50 [IST]
Other articles published on Nov 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+