Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடிஞ்சா தொட்டு பாருங்க..!! விராட் கோலிக்காக வெகுண்டெழுந்த சச்சின்.. அப்படி என்ன நடந்தது!

மும்பை: விராட் கோலி யாராலும் தொடக்கூட முடியாது என விராட் கோலிக்காக சச்சின் ஆதரவுக்கொடுத்துள்ளார்.

Recommended Video

Virat Kohli-ஐ யாராலும் நெருங்க முடியாது.. ஆதரவு கொடுத்த Sachin Tendulkar

இந்திய கிரிக்கெட்டில் கடந்த தலைமுறையில் சச்சின் டெண்டுல்கர் மிகப்பெரிய ஜாம்பவான் என்ற பெருமையை பெற்றால், இந்த தலைமுறையில் விராட் கோலி பெற்று வருகிறார்.

விராட் கோலி - சச்சின் ஆகியோரை ஒப்பீடு செய்து, யார் சிறந்தவர்கள் என ரசிகர்கள் மோதிக்கொள்வது நீண்ட வருடமாக நடந்து வருகிறது.

சச்சின் ரெக்கார்ட்

சச்சின் ரெக்கார்ட்

ஆனால் சமீப காலமாக விராட் கோலியின் பெயர்கள் அதில் அடிவாங்கி வருவது தான் உண்மை. 50 ஓவர் கிரிக்கெட்டில் விராட் கோலி இன்னும் 6 சதங்கள் அடித்தால், சச்சின் அடித்த 49 சதங்களை கடந்து சாதனை படைப்பார். ஆனால் ஒட்டுமொத்த ரன்கள், 200 டெஸ்ட்களில் விளையாடியவர் போன்ற சாதனைகளை கோலி படைப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது.

ரன் மிஷன் சோர்வு

ரன் மிஷன் சோர்வு

1998ம் ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை சேர்த்து 42 இன்னிங்ஸில் ஆடியிருந்த சச்சின் 2541 ரன்களை அடித்திருப்பார். விராட் கோலி கடந்த 2016ம் ஆண்டு 41 இன்னிங்ஸில் 2595 ரன்களை அடித்துவிட்டார். ஆனால் அதன்பிறகு ரன் வேகம் குறைந்தது. குறிப்பாக இரண்டரை ஆண்டுகளாக சதமே அடிக்காமல் உள்ளார்.

ஆதரவுக் கொடுத்த சச்சின்

ஆதரவுக் கொடுத்த சச்சின்

இந்நிலையில் இதுகுறித்து சச்சின் பேசியுள்ளார். அதில், 100 டெஸ்ட்களில் விளையாடுவதே பெரிய சாதனையாகும். பெரும் வித்தியாசம் என்னவென்றால், விராட் கோலி கேப்டனாகவும் இருந்துக்கொண்டு, பேட்ஸ்மேனாகவும் அனுபவத்தை பெற்றுள்ளார். 33 வயதை நெருங்கிவிட்ட போதும் கோலி நிச்சயமாக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார். ஏனென்றால் அவரின் ஃபிட்னஸ் அப்படி உள்ளது.

தொட கூட முடியாது

தொட கூட முடியாது

கோலியின் ஃபிட்னஸை பார்க்கும் போது, அவர் இன்னும் 10 ஆண்டுகள் விளையாடினால் கூட ஆச்சரியப்படுவதற்கு அல்ல. யாராலும் அவரை தொடக்கூட முடியாது என்பது தான் உண்மை. டெஸ்ட் கிரிக்கெட் மீண்டும் அதிகளவில் நடைபெற தொடங்கிவிட்டது. அடுத்த 7 - 8 ஆண்டுகளுக்குள் இன்னும் 100 டெஸ்ட்கள் நடக்கலாம். கோலி என்றுமே தன்னால் முடியாது என நினைக்கமாட்டார். இதனால் அவர் நிச்சயம் சாதித்து காட்டுவார் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, March 10, 2022, 11:40 [IST]
Other articles published on Mar 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+