சச்சின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. டெண்டுல்கருடைய டி20 ரெக்கார்ட்ஸ் தெரியுமா.. குவியும் வாழ்த்துகள்
மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
சூப்பர் ஸ்டார் யார்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடலுக்கு ஏற்ப, சச்சினுடைய சாதனையை சின்ன குழந்தைகளே சொல்லும்.
ஆனால், பிராட்மேன் காலத்தில் வெறும் டெஸ்ட் போட்டி தான், ஒருநாள் ஆட்டம் கிடையாது. விவயன் ரிச்சர்ட்ஸ் காலத்தில் டி20 போட்டிகள் கிடையாது.

ஐபிஎல் தொடரில் சச்சின்
அவ்வளவு ஏன் சச்சின் காலத்திலும், டி20 போட்டிகள் அவ்வளவு கிடையாது. சச்சின் தன் வாழ்நாளில் ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் தான் விளையாடி இருக்கிறார். அதில் அவர் அடித்த ரன்கள் 10. ஆனால், சச்சின் டெஸ்ட், ஒருநாள் போட்டியில் என்ன சாதனைகள் படைத்திருக்கிறாரோ, அதே போன்ற சாதனைகளை டி20 போட்டியிலும் ஐபிஎல் மூலம் படைத்திருக்கிறார்.

35 வயதில் முதல் போட்டி
டி20 போட்டிகள் எல்லாம் இளைஞர்களுக்கு தான்.. பெரியவர்கள் எல்லாம் ஓரம் போங்கனு சொன்ன போது, தனது 35வது போட்டியில் காயத்துக்கும் நடுவில் சச்சின் ஐபிஎல் முதல் சீசனில் பங்கேற்றார். அதில் சச்சின் 7 போட்டியில் மட்டும் தான் பங்கேற்றார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சீசனில் 364 ரன்கள் விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

சச்சின் சாதனைகள்
ஆனால், டி20 போட்டியிலும் நான் தான் ராஜா என்று நிரூபித்தது 2010ஆம் ஆண்டு தான். 15 போட்டியில் விளையாடி 618 ரன்கள் விளாசி, அந்த ஆண்டுக்கான ஆரஞ்ச் நிற தொப்பியை சச்சின் வென்றார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை இன்று வரை சச்சின் படைத்திருக்கிறார்.
Recommended Video

டி20யிலும் கிங் தான்
மொத்தமாக சச்சின் 78 போட்டியில் விளையாடி 2334 ரன்கள் விளாசி, இருக்கிறார். இதில் ஒரு சதமும் அடங்கும். இதனால் டெஸ்ட், ஒருநாள் மட்டுமல்ல டி20யிலும் கிங் தான் என்று நிரூபித்து இருக்கிறார் சச்சின். சச்சினுடைய பிறந்தநாளுக்கு லட்சுமணன், ஜெய்ஷா, இஷாந்த் சர்மா, ஓஜா உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications