
சச்சினுக்கும் சோதனை
சூர்யகுமார் விளையாடிய 21 இன்னிங்ஸில் இரண்டு முறை தான் அரை சதம் அடித்திருக்கிறார். இதனால் சூரியகுமார் ஒருநாள் கிரிக்கெட்டில் சரிப்பட்டு வர மாட்டார் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் சச்சினுக்கும் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.ஆம் சூரியகுமார் யாதவ் எவ்வாறு ஹாட்ரிக் டக்அவுட் ஆகி வெளியேறினாரோ அதேபோல் சச்சின் டெண்டுல்கர் தன் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ந்து மூன்று முறை டக்அவுட் ஆகியிருக்கிறார்.

3 முறை டக் அவுட்
அதுவும் இந்த சம்பவம் சரியாக சச்சின் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்த பிறகு நடைபெற்று இருக்கிறது. 1994 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கொழும்புவில் விளையாடிய போது 6 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆனார்.இதனை அடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் அந்தப் போட்டியிலும் மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு டக் அவுட் ஆனார்.

சச்சின் பதிலடி
அதேத் தொடரில் அடுத்த போட்டியில் ஏழு பந்துகளை எதிர்கொண்ட சச்சின் டக் அவுட் ஆகி வெளியேறினார். அந்தத் தொடரில் மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சச்சின் டெண்டுல்கர் 8 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் சச்சின் மீது கடும் விமர்சனங்கள் இருந்தது. முதல் சதம் அடித்த சச்சின் தன்னுடைய ஃபார்மை இழந்து விட்டதாக பலரும் ஏளனமாக பேசினார்கள். ஆனால் அதே மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் சச்சின் 115 ரன்கள் எடுத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

பாடம் கற்பாரா
சச்சின் தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய முதல் இரண்டு இன்னிங்ஸ்மே முதலில் டக்அவுட் தான் ஆனார். இதுபோன்று ஹாட்ரிக் டக் அவுட் ஆகிவிட்டார் என்ற காரணத்திற்காக அவரை அணியிலிருந்து நீக்கி இருந்தால் இந்நேரம் நமக்கு இப்படி ஒரு ஜாம்பவான் கிடைத்து இருப்பாரா? இதேபோன்று சூரிய குமார்யாதவும் சச்சின் இடமிருந்து பாடத்தை கற்றுக் கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டிலும் மீண்டும் வரவேண்டும் என்பதை ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications











