இளம் புயல் பிரனவ் தனவாடேவுக்கு 'கடவுள்' கொடுத்த இன்ப அதிர்ச்சி
மும்பை: 1009 ரன்கள் குவித்து உலக சாதனைபடைத்த மும்பையை சேர்ந்த சிறுவன் பிரனவ் தனவாடே தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பரிசை பெற்றுள்ளார். ஆம்.. பேட்டிங் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆட்டோ கிராப் போட்டு தனது பேட்டை பிரனவுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

பள்ளிகள் நடுவேயான கிரிக்கெட் போட்டியில் 1009 ரன்கள் குவித்ததன் மூலம், முதல்தர கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்து உலக சாதனை படைத்துள்ளார் மும்பையை சேர்ந்த 15 வயது சிறுவன் பிரனவ் தனவாடே. டிவிட்டர் மூலம், உடனடியாக வாழ்த்து கூறியிருந்தார் சச்சின்.
இந்நிலையில், தனது கையெழுத்திட்ட பேட்டை தன்வாடேவுக்கு கிஃப்டாக கொடுத்து மகிழ்ந்துள்ளார் கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின். அந்த பேட்டுடன், பிரனவ் தனது பெற்றோருடன் போட்டோவுக்கு, போஸ் கொடுத்துள்ளார்.
Story first published: Friday, January 8, 2016, 9:50 [IST]
Other articles published on Jan 8, 2016
Read in English: Sachin Tendulkar gifts his bat to Pranav


Click it and Unblock the Notifications