“அவரு வேற லெவல் தான்” சச்சினையே வியக்கவைத்த இளம் பந்துவீச்சாளர்..இந்தியாவின் எதிர்காலம் என புகழாரம்
மும்பை: இந்திய அணியின் இளம் வீரர் ஒருவரை பார்த்து முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரே வியப்படைந்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் செஞ்சூரியனில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

டெஸ்ட் தொடர்
தென்னாப்பிரிக்க களத்தை பொறுத்தவரையில் பேட்டிங்கை விட பந்துவீச்சு தான் மிகவும் முக்கியமான ஒன்று. அங்குள்ள பிட்ச்-கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி குறைந்தது 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது. அதில் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் முதன்மை தேர்வாக இருக்கும் நிலையில் முகமது சிராஜுக்கு 3வது பவுலராக வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

முகமது சிராஜ்
சீனியர் வீரர் இஷாந்த் சர்மா அணியில் இருக்கும் போதிலும் அவரை விடுத்து முகமது சிராஜ் தேர்வு செய்யப்படவுள்ளார். கடந்த சில தொடர்களில் சிராஜின் ஃபார்ம் மிகவும் சிறப்பாக உள்ளது. பும்ரா - ஷமியுடன் இணைந்து அவர் விளையாடினால் நிச்சயம் எதிர்காலத்தில் முன்னணி வீரராக இருப்பார் என கூறப்படுகிறது.

வியந்துப்போன சச்சின்
இந்நிலையில் சிராஜ் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விஷயத்தை அறிமுகம் செய்வதாக சச்சினே வியப்படைந்துள்ளார். சிராஜின் கால்களில் ஸ்ப்ரிங் உள்ளதாக நினைக்கிறேன். ஏனென்றால், அவரின் முழு திறனும் அப்படிப்பட்ட வேகத்தில் இருக்கும். அவரை பார்த்தால், முதல் ஓவர் போடுகிறாரா, கடைசி ஓவர் போடுகிறாரா என்பதே தெரியாது. எப்போதும் ஒரே மாதிரியான புத்துணர்ச்சியுடன் இருப்பார். நல்ல நம்பிக்கை அவரிடம் இருப்பதாக நினைக்கிறேன்.
Recommended Video

சச்சினே வியப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிராஜ் அறிமுகமானார். அப்போது அவர் முதல் போட்டியில் தான் விளையாடுகிறாரா என்ற சந்தேகம் எழும் அளவிற்கு பந்துவீசினார். அவ்வளவு கட்சிதமாக கையாண்டார். அவர் வித்தியாசமான முறைகளில் லெந்த்களை மாற்றி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை கொடுப்பது அவ்வளவு அழகாக இருக்கும். இதன் மூலம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பு அதிகம் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் அவரை பார்க்கும் போதும் புது புது விஷயங்களை செய்துக்கொண்டே இருப்பார் என சச்சின் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications