Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாஹீனின் ஸ்விங்கை எப்படி சமாளிப்பது? சச்சின் தந்த அட்டகாச ஐடியா.. இந்திய வீரர்கள் செய்வார்களா?

மெல்பேர்ன்: பாகிஸ்தான் பவுலர் சாஹீன் அஃப்ரிடியை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்திய வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் அட்வைஸ் கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி நாளை மதியம் 1.30 மணிக்கு மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

இந்திய அணியில் கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் என அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்கும் போதிலும் அவர்கள் மீது சந்தேகம் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. இதற்கு காரணம் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் அஃப்ரிடி தான். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான இவரின் பவுலிங் தான் கடந்தாண்டு இந்தியாவின் டாப் ஆர்டர் சரிந்தது.

சச்சின் அட்வைஸ்

சச்சின் அட்வைஸ்

இந்நிலையில் சாஹீனின் பவுலிங்கை எப்படி அடித்து ஆடலாம் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சாஹீன் ஒரு அட்டாக்கிங் பவுலராக இருப்பதால் அதிவேகமாக தான் ஸ்விங் செய்வார். இதனால் பெரும்பாலும் பேட்ஸ்மேனின் உடலுக்கு நேராக பந்துகள் வரலாம். இவரை சமாளிக்க இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரே ஒரு விஷயத்தை செய்தால் போதும்.

V வடிவம்

V வடிவம்

சாஹீனின் பந்துவீச்சை பேட்ஸ்மேன் தனது திசையில் இருந்து V வடிவில் ஆடினால் மட்டும் போதும். அதாவாது லாங் ஆன், ஸ்ட்ரைட், லாங் ஆஃப் ஆகிய திசைகளில் மட்டும் அடிக்க முயன்றால் போதும், பந்துகள் சரியாக பொருந்திக்கொள்ளும். மற்ற திசைகளில் திருப்பி விளையாட நினைத்தால் ரிஸ்க்காக அமையலாம் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

ட்ரிகரிங்

ட்ரிகரிங்

இதே போல ட்ரிகரிங் மூவ்மண்ட்டை சரியாக பயன்படுத்த வேண்டும். அதாவது பவுலர் பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பாக, பேட்ஸ்மேன்கள் தங்கள் காலை முன்பு கொண்டு வந்துவிட்டு பின்னர் பின்னர் சென்று தூக்கி அடிப்பார்கள். அப்படி காலை முன்வைத்தால் ஃப்ரெண்ட் ஃபூட்டில் மட்டும் தான் ஆட வேண்டும் என்றல்ல, பேக் ஃபுட்டிலும் சென்று விளையாடலாம். அது சிறப்பாக இருக்கும் என சச்சின் கூறியுள்ளார்.

Story first published: Saturday, October 22, 2022, 19:22 [IST]
Other articles published on Oct 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+