ஐசிசியின் வருடாந்திர சிறந்த வீரராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு

இந்த விருதை அவர் பெறுவது இதுவே முதல் முறையாகும். மேலும் மக்களின் விருப்ப வீரர் விருதையும் சச்சின் பெறுகிறார்.
இன்னொரு இந்திய வீரரான வீரேந்திர ஷேவாக்குக்கு வருடாந்திர சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது கிடைத்துள்ளது.
பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த 20 வருடமாக கிரிக்கெட் ஆடி வரும் சச்சின், தென் ஆப்பிரிக்காவின் ஹஷீம் ஆம்லா, இங்கிலாந்து வீரர் கிராம் ஸ்வான், ஷேவாக் ஆகிய கடும் போட்டிகளைத் தாண்டி விருதைத் தட்டிச் சென்றார்.
விருது வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது. விருதைப் பெற்றுக் கொண்ட சச்சின் கூறுகையில், தாமதமாக வந்தாலும் எனக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் 21வது வருடத்தில் இதைப் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதுக்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன் என்றார்.
1989ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications