ரசிகர்களே, என் படத்திற்கு தலைப்பை சொன்னால் சர்பிரைஸ் காத்திருக்கிறது: சச்சின்
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கை வரலாற்று படத்திற்கு தலைப்பு ஒன்றை அறிவிக்குமாறு ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் அவருக்கு இன்னும் மவுசு போகவில்லை.
இந்நிலையில் அவரின் வாழ்க்கை வரலாறு படமாக வர உள்ளது. இது குறித்து சச்சின் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
படம்
விரைவில் என் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் எடுக்கப்படுகிறது என்பதை பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறேன்.
படத்திற்கு பெயர்
இந்த படத்தில் உங்கள் அனைவரையும் ஈடுபடுத்த விரும்புகிறேன். படத்திற்கேற்ற தலைப்பை பரிந்துரை செய்யுங்கள். உங்களின் எண்ணங்களை தெரிவியுங்கள்.
ஸ்பெஷல்
படத்திற்கு பொருத்தமான தலைப்பை தெரிவிப்பவர்களுக்கு ஸ்பெஷலானது காத்திருக்கிறது. உங்களிடம் இருந்து தலைப்பை கேட்க காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சச்சின் ட்வீட் செய்துள்ளார்.

முயற்சி செய்யலாமே
சச்சின் படத்திற்கு நல்ல தலைப்பை பரிந்துரைத்து அந்த சர்பிரைஸ் என்னவென்று தெரிந்து கொள்ள நீங்களும் முயற்சி செய்யலாமே!


Click it and Unblock the Notifications