
விசாரணை
வார்னேவின் மரணம் குறித்து தாய்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வர்ர்னே போதை பொருள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் இல்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே அவருக்கு இருதய பிரச்சினையும், ஆஸ்துமா பிரச்சினையும் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டாக்குமெண்டரி
இந்த நிலையில், வார்னே குறித்து சச்சின் அளித்துள்ள பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வார்னே உயிருடன் இருக்கும் போது, அவரை பற்றி அமேசான் பிரைம் ஒரு டாக்குமெண்டரியை தயாரித்தது.அதில் கிரிக்கெட் களத்தில் வார்னேவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சச்சினின் பேட்டியும் இடம்பெற்றிருந்தது.

வீட்டிற்கு அழைப்பு
இதில் பேசிய சச்சின், வார்னே ஒரு முறை மும்பைக்கு வந்திருக்கும் போது, உங்களுக்கு இந்திய உணவுகள் பிடிக்குமா என்று கேட்டேன். அதற்கு பிடிக்கும் என்றார். அப்போது என் வீட்டிற்கு விருந்துக்காக அழைத்தேன். வார்னேவுக்காக நானே சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை சமைத்து பரிமாறினேன்.
Recommended Video

பிடிக்கவில்லை
ஆனால் வார்னே சாப்பிடுவது போல் நடித்துவிட்டு, எங்கள் கிட்சனுக்கு சென்று அவரே ஒரு சாண்ட்வெஜ் செய்து சாப்பிட்டார். நாங்கள் சமைத்த உணவு காரமாக இருந்தது. அதனை வார்னேவால் சாப்பிட முடியவில்லை. எனினும் என் மனது கஷ்டப்படும் என்பதற்காக வார்னே அதை வெளிக்காட்டி கொள்ளவே இல்லை. அது தான் வார்னேவுடன் பண்பு.


Click it and Unblock the Notifications











