Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வுக்கு பிறகும் சாதனை படைத்த சச்சின்!

மும்பை: சச்சினின் சுயசரிதைப் புத்தகமான 'பிளேயின் இட் மை வே' விற்பனையில் சாதனை படைத்து சச்சினுக்கு மேலும் மகுடம் சூட்டிய நிலையில், தற்போது 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ஸிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

அனைத்து வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதி 416 பக்கங்கள் தனது சுயசரிதை புத்தகமான 'பிளேயின் இட் மை வே' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

Sachin Tendulkar's autobiography enters Limca book of records

இந்த நூல், வெளியீட்டுக்கு முன்பே 1 லட்சத்து 50 ஆயிரம் பிரதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டது. எந்தப் புத்தகத்துக்கும் இந்தளவுக்கு முன்கூட்டியே வரவேற்பு கிடைத்ததில்லை. அந்த விதத்தில் சச்சினின் சுயசரிதை புத்தகம், சாதனை படைத்துள்ளதாக ஹாச்செட் இந்தியா நிறுவனம் அப்போதே அறிக்கை வெளியிட்டது.

புத்தகம் வெளியான 2 நாள்களில் 2 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டன. இதன் சில்லறை விற்பனை தொகை 13.51 கோடி ரூபாய் அளவில் உள்ளது. இதனையடுத்து இந்தியாவில் இருந்து வெளியாகும் லிம்கா சாதனை புத்தகத்தில் சச்சின் டெண்டுல்கர் புத்தகம் இடம்பிடித்தது.

Story first published: Saturday, February 20, 2016, 15:28 [IST]
Other articles published on Feb 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+