Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் வரிசையில் சச்சினும் இனி காமிக் ஹீரோ!

மும்பை: சச்சின் குறித்த காமிக் புத்தகம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் சச்சின் கதாநாயகனாக வலம்வருவார் என கூறப்படுகிறது. இந்த வருட இறுதிக்குள் இந்தப் புத்தகம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

சச்சினின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து சில பகுதிகளை எடுத்து இந்த காமிக் புத்தகம் உருவாக்கப்பட இருக்கிறது. இது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகம் முக்கியமாக குழந்தைகளை மையமாக வைத்து அவர்களைக் கவரும் வண்ணத்தில் வடிவமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

 சச்சினின் புதிய செயல்பாடு

சச்சினின் புதிய செயல்பாடு

பொதுவாக விளையாட்டு உலகில் பெரிய அளவில் விளங்கிய நபர்கள் தங்கள் ஓய்வுக்கு பின் எதாவது வியாபாரம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலிய அணி வீரர்களில் பலர் கிரிக்கெட் உபகரணங்கள் விற்கும் கடைகள் நடத்துகின்றனர். இன்னும் சிலர் ஹோட்டல்கள், விளையாட்டு பயிற்சி அரங்குகள் என வித்தியாசமாக நிறைய விசயங்களை செய்கின்றனர். அதே போல் சச்சினும் ஓய்வுக்குப் பின் தற்போது புத்தகம் எழுதி வெளியிடுவது, படம் எடுத்து வெளியிடுவது என தன்னை மிகவும் பிசியாக வைத்துள்ளார்.

 சச்சின் எழுதிய புத்தகம்

சச்சின் எழுதிய புத்தகம்

இந்த நிலையில் முதல்கட்டமாக சச்சின் கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் புத்தகத்தை எழுதினார். ''பிளேயிங் இட் மை வே'' என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் அவரது வாழ்க்கை வரலாறு ஆகும். இந்தப் புத்தகம் வெளியானதில் இருந்து பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் சச்சினின் இந்தப் புத்தகம் குறித்து ரிவ்யூக்கள் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.

 சச்சின் பற்றிய படம்

சச்சின் பற்றிய படம்

இதையடுத்து புத்தகத்திற்கு அடுத்த படியாக சச்சின் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தார். ஜேம்ஸ் என்பவரால் இயக்கப்பட்ட இந்தப் படத்திற்கு சச்சின்- ஏ பில்லியன் டிரீம்ஸ் என்று பெயரிடப்பட்டது. டாக்குமெண்டரி வடிவில் வெளிவந்திருந்த இந்தப் படமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் கணிசமான வசூலையும் இந்தப் படம் பெற்றது.

 சச்சின் இருக்கும் காமிக் புத்தகம்

சச்சின் இருக்கும் காமிக் புத்தகம்

இந்த நிலையில் சச்சின் குறித்த காமிக் புத்தகம் தற்போது வெளிவர இருக்கிறது. இதில் சச்சினின் ஸ்பெஷல் உருவம் காமிக் பொம்மையாக வடிவமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சச்சினின் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவங்கள் எல்லாம் இதில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் புத்தகம் 25 பக்கங்கள் மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, October 19, 2017, 16:47 [IST]
Other articles published on Oct 19, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+