Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினின் மகளா இது..??? மாடலிங்கில் அசத்தும் சாராவின் வைரல் புகைப்படங்கள்..

மும்பை: புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழி நமது ஊரில் உண்டு. அதற்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது சச்சின் குடும்பம்.

கிரிக்கெட் உலகின் சாதனை மன்னனாக விளங்கும் சச்சின்டெண்டுல்கருக்கு சாரா டெண்டுல்கர் மற்றும் அர்ஜூன் டெண்டுல்கர் என 2 குழந்தைகள் உள்ளனர்

இதில் அர்ஜூன் டெண்டுல்கர் , தந்தை போல் நானும் கிரிக்கெட் வீரர் ஆவேன் என்று பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்

தந்தை வழியில்..

தந்தை வழியில்..

தந்தை போல் வெறும் பேட்ஸ்மேனாக இல்லாமல், அர்ஜூன் டெண்டுல்கர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் இடதுகை பேட்ஸ்மேன் என ஆல் ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். ரஞ்சி கோப்பையில் மும்பை அணியிலும், ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் அர்ஜூன் டெண்டுல்க்ர் இடம்பிடித்துள்ளார். எனினும் கிரக்கெட்டையே அர்ஜூனும் தேர்ந்து எடுத்து உள்ளதால் தந்தையின் பெயர், புகழ் அவரை நிழல் போல் பின் தொடர்கிறது

மாடல் சாரா

மாடல் சாரா

இந்த நிலையில் தான் மகள் சாரா டெண்டுல்கர், வேறு துறையை தேர்ந்து எடுத்துள்ளார். 24 வயதான சாரா டெண்டுல்கர் தற்போது மாடலிங் உலகில் கால் பதித்துள்ளார். பிரபல ஆடை நிறுவனத்தின் மாடலாக ஒப்பந்தமாகியுள்ள சாரா டெண்டுல்கர், அதற்கான விளம்பரத்திலும் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

பிரபல மாடல் அழகிகளான பணித்தா சந்து, டானியா செரோஃப் ஆகியோருடன் சாரா டெண்டுல்கரும் விளம்பரத்தில் தோன்றியுள்ளார். இதனை தவிர்த்து தினந்தோறும் புது புது உடை அணிந்து விதவிதமாக புகைப்படங்களையும் சாரா டெண்டுல்கர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் சாராவை 15 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

பாலிவுட்

பாலிவுட்

சச்சினின் மகள் என்ற பிம்பத்தை மாற்றி, சாரா என்ற தன் பெயரை நிலை நிறுத்த அவர் பல முயற்சிகள் எடுத்து வருகிறார். சாராவின் இந்த முயற்சிக்கு நல்ல பயனும் கிடைத்துள்ளது. தற்போது பல நிறுவனங்கள் சாராவை தங்களது மாடலாக ஒப்பந்தம் செய்ய காத்துள்ளனர். மேலும் பல பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க சாராவுக்கு வாய்ப்பும் வருகின்றன. இதனால் சச்சின் குடும்பம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

Story first published: Tuesday, December 7, 2021, 15:31 [IST]
Other articles published on Dec 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+