Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் மகளின் “நைட் டேட்டிங்”.. ஆண் நண்பருடனான புகைப்படம் வைரல்.. கோபத்தில் இளம் கிரிக்கெட் வீரர்!

மும்பை: சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா ஆண் நண்பர் ஒருவருடன் "டேட் நைட்" மேற்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக அறியப்படும் சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி தம்பதியினரின் மூத்த மகள் சாரா டெண்டுல்கர்.

விளையாட்டு துறையின் பக்கம் வராத சாரா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் சாரா டெண்டுல்கரை சுமார் 15 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

சாரா டெண்டுல்கர்

சாரா டெண்டுல்கர்

23 வயதாகும் சாரா லண்டனில் மருத்துவம் படித்துள்ளார். இவர் தனது அன்றாட வாழ்வில் எந்தவொரு விஷயத்தை செய்தாலும், அதனை உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரை ட்ரீம் கேர்ளாக கருதி, ஸ்டோரிகளை பார்ப்பதற்கென்றே பல ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் பதிவு

இன்ஸ்டாகிராம் பதிவு

இந்நிலையில் சமீபத்தில் சாரா டெண்டுல்கர் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் ஆண் நண்பர் ஒருவருடன் இரவு நேரத்தில் டேட்டிங் செய்துள்ளார். அவரின் கையை பிடித்துக்கொண்டு சாரா இருப்பது போன்று புகைப்படத்தை பதிவிட்டு, 'நைட் டேட்டிங்' என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.

 கிரிக்கெட் வீரருடன் காதல்

கிரிக்கெட் வீரருடன் காதல்

இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லும் சாரா டெண்டுல்கரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிடப் போவதாக கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து இருவருமே எந்த பதிலும் தரவில்லை. இந்த சூழலில் தான் தற்போது வேறு ஒரு ஆண் நண்பருடன் சாரா டெண்டுல்கர் டேட்டிங் செய்து வருகிறார். இதனால் கில்- சாரா இடையே காதல் முறிந்துவிட்டதாக தெரிகிறது.

மாடலிங் துறை

மாடலிங் துறை

சுப்மன் கில் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அடுத்ததாக தென்னாப்பிரிக்க தொடரிலும் இடம்பெறுவார் எனத் தெரிகிறது. இதே போல சாரா டெண்டுல்கர் தற்போது மாடலிங் துறையில் தடம் பதித்துள்ளார். விரைவில் திரையுலகிலும் கால்பதிப்பார் எனக்கூறப்படுகிறது.

Story first published: Tuesday, December 7, 2021, 15:32 [IST]
Other articles published on Dec 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+