Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் மகளின் “பார்ட்டி நடனம்”.. ஆண் நண்பர்களுடன் சேர்ந்து செய்த சேட்டை.. இணையத்தை கலக்கும் வீடியோ!

மும்பை: சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா நண்பர்களுடன் சேர்ந்து மும்பை ஹோட்டலில் கலக்கல் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Recommended Video

சச்சின் மகளின் “பார்ட்டி நடனம்”.. ஆண் நண்பர்களுடன் சேர்ந்து செய்த சேட்டை.. இணையத்தை கலக்கும் வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி தம்பதியினரின் மூத்த மகள் தான் சாரா டெண்டுல்கர்.

விளையாட்டு துறையின் பக்கம் வர விருப்பம் இல்லாத சாரா, பாலிவுட் திரையுலகை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இதற்காக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர்.

சாரா டெண்டுல்கர்

சாரா டெண்டுல்கர்

23 வயதாகும் சாரா லண்டனில் மருத்துவம் படித்துள்ளார். இவர் தனது அன்றாட வாழ்வில் எந்தவொரு விஷயத்தை செய்தாலும், அதனை உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் இன்ஸ்டாகிராமில் அவரை சுமார் 15 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இன்னும் சில அவரை ட்ரீம் கேர்ளாக கருதி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் பதிவு

இன்ஸ்டாகிராம் பதிவு

சமீபத்தில் சாரா டெண்டுல்கர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் இரவு நேரத்தில் டேட்டிங் செய்துள்ளார். அவரின் கையை பிடித்துக்கொண்டு சாரா இருப்பது போன்று புகைப்படத்தை பதிவிட்டு, 'நைட் டேட்டிங்' என குறிப்பிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவியது. அவருக்கு விரைவில் திருமணம் என தகவல்கள் பரவியது.

புது வீடியோ

புது வீடியோ

இந்நிலையில் சாரா டெண்டுல்கரின் புதிய வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தை கலக்குகிறது. பிரபல பாடகரான ஏபி தில்லோனுக்கு ஆலியா பட், ரன்வீர் சிங் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் ரசிகர்களாக உள்ளனர். அந்தவகையில் சாரா டெண்டுல்கரும் அவருக்குதீவிர ரசிகை ஆவார். சமீபத்தில் நடந்த மும்பை கான்செர்ட் ஒன்றிற்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து சென்றுள்ளார்.

கலக்கல் நடனம்

கலக்கல் நடனம்

அங்கு சாரா, தனது நண்பர்களுடன் சேர்ந்து போட்ட கலக்கல் நடனம் பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. சாந்தமானவராக அறியப்படும் சாரா, தில்லோனின் பாடலுக்கு உற்சாகத்துடன் குதித்து நடனமாடியுள்ளார். இந்த பார்டியின் போது சாரா மதுபானம் அருந்தியிருக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. மாடலிங் மற்றும் பாலிவுட் திரையுலகில் கால்பதிக்க காத்திருக்கும் சாரா டெண்டுல்கரின் இதுபோன்ற வீடியோக்கள் உதவிகரமாக உள்ளது.

கோவா பயணம்

கோவா பயணம்

சாரா டெண்டுல்கர் கடந்த சில நாட்களாக கோவாவில் முகாமிட்டுள்ளார். அங்கு தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு, கடற்கரையோரம் எடுத்து பதிவிட்டு வரும் புகைப்படங்களுக்கு இதயங்கள் குவிந்து வருகிறது.

Story first published: Friday, December 24, 2021, 18:11 [IST]
Other articles published on Dec 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+