For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணியின் வெற்றியை கொண்டாடும் தருணம் இது.. சச்சின் புகழாரம் !

By Karthikeyan

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள டோணியின் முடிவை தாம் மதிப்பதாக சச்சின் டெண்டுல்கள் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து டோணி விலகுவதாக அறிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டோணி பிசிசிஐ இடம் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Sachin Tendulkar speaks on MS Dhoni's decision to quit captaincy

பிசிசிஐ தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டோணியின் அறிவிப்பை தொடர்ந்து விராட் கோஹ்லி கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் டோணியின் முடிவை தாம் மதிப்பதாக சச்சின் டெண்டுகல்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், டோணியின் முடிவை மதிக்கிறேன். அவரின் தலைமையில் பெற்ற வெற்றிகளை கொண்டாடும் தருணம் இது.

அதிரடி வீரராய் அணியில் நுழைந்து, கேப்டனாக மாறி நிலைத்து நின்று, டி20, ஒருநாள் போட்டிகளில் உலகக்கோப்பையை பெற்றுத் தந்தததை யாரும் மறக்க முடியாது. தொடர்ந்து ஒரு வீரராக களத்தில் சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்கள் என சச்சின் கூறியுள்ளார்.

Story first published: Thursday, January 5, 2017, 1:24 [IST]
Other articles published on Jan 5, 2017
English summary
Batting legend Sachin Tendulkar today (January 4) joined cricketers and fans across the world to congratulate Mahendra Singh Dhoni on a successful captaincy career. Tendulkar said it was a day to "celebrate" and "respect" Dhoni.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+