Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரியான நண்பேண்டா சச்சின்.. உணர்ச்சிவசப்படும் கங்குலி!

கொல்கத்தா: கிரேக் சேப்பல் விவகாரத்தின்போது எனக்கு பெரும் உறுதுணையாக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர் என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.

அந்த சமயத்தில் சச்சின் தனக்கு முழு ஆதரவைக் காட்டியதாகவும் நன்றியுடன் கூறுகிறார் கங்குலி.

சச்சின் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் கங்குலி.. அதிலிருந்து சில...

சேப்பல் என்னை விட்டு விலகியபோது

சேப்பல் என்னை விட்டு விலகியபோது

சேப்பலுக்கும் எனக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டபோது என் பக்கம் நின்றார் சச்சின்.

எல்லாப் பேரையும் பகைத்த சேப்பல்

எல்லாப் பேரையும் பகைத்த சேப்பல்

சேப்பல் பேச்சைக் கேட்டு என்னை அணியிலிருந்து விலக்கியபோது, எனக்கும், சேப்பலுக்கும்தான் பிரச்சினை என்று நினைத்தேன். ஆனால் நான் மீண்டும் அணிக்குத் திரும்பியபோதுதான் சேப்பலுக்கும், அத்தனை பேருக்கும் பிரச்சினை என்பதை உணர்ந்தேன்.

சச்சினுடனும் மோதினார் சேப்பல்

சச்சினுடனும் மோதினார் சேப்பல்

சேப்பல், என்னுடன்மட்டுமல்ல, சச்சினுடனும் மோதியுள்ளார் என்பதை அப்போதுதான் அறிந்தேன்.

லட்சுமணனையே கொந்தளிக்க வைத்தவர்

லட்சுமணனையே கொந்தளிக்க வைத்தவர்

மிகவும் அமைதியான வி.வி.எஸ். லட்சுமணனையே டென்ஷன்படுத்தியவர் சேப்பல். அவருக்கு இந்தியாவில் உண்மையிலேயே 'நல்ல' பெயர் கிடைத்தது.

தங்கமானவர் சச்சின்

தங்கமானவர் சச்சின்

எல்லோரையும் போலவே சச்சினும் பலமுறை அப்செட் ஆகிறவர்தான். ஆனால் அதை ஒருபோதும் வெளியில் காட்டிக் கொள்ளாதவர் சச்சின். விமர்சனங்களைக் கண்டு அவர் மனம் துவண்டாலும் கூட வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார் என்றார் கங்குலி.

10 வருட நட்பு

10 வருட நட்பு

சச்சினும், கங்குலியும் அபாரமான தொடக்க ஜோடியாக திகழ்ந்தவர்கள். கிட்டத்தட்ட 10 வருடம் அணியில் ஒன்றாக இணைந்து விளையாடியவர்கள்.

Story first published: Wednesday, November 6, 2013, 15:52 [IST]
Other articles published on Nov 6, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+