Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க பன்றது ரொம்ப ஓவர்.. கடும் அதிருப்தியில் சச்சின்.. இங்கிலாந்து வாரியத்தின் அதிரடிநடவடிக்கை!

மும்பை: ஒல்லி ராபின்சனுக்கு எதிராக இங்கிலாந்து வாரியம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு சச்சின் டெண்டுல்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரிக்கெட் உலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது இளம் வீரர் ஒல்லி ராபின்சன் மீது இங்கிலாந்து வாரியம் எடுத்துள்ள நடவடிக்கை தான்.

ஒல்லி ராபின்சன், தான் சிறு வயதில் செய்த தவறுக்காக அறிமுக போட்டியிலேயே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு முதல் போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து வீரர் ஒல்லி ராபின்சன், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களையும், 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை சாய்த்து அசத்தினார். அதே போல பேட்டிங்கில் 42 ரன்களும் அடித்திருந்தார். ஆனால் அவருக்கு பாராட்டிற்கு பதிலாக விமர்சனங்கள் தான் அதிகளவில் வந்தது.

காரணம்

காரணம்

8 வருடங்களுக்கு முன்பு சில டுவீட்களை வெளியிட்டிருந்த ராபின்சன், அதில் இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ராபின்சன் மன்னிப்பும் கேட்டிருந்தார்.

தடை

தடை

ஆனால் ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது மன்னிப்பை நிராகரித்து அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. அவர் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சச்சின்

சச்சின்

இந்நிலையில் ஒல்லி ராபின்சனுக்கு அதரவாக சச்சின் டெண்டுல்கர் வாய்த்திறந்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ராபின்சன் அந்த ட்வீட்களை 8 வருடங்களுக்கு முன்பு வெளியிட்டார் என்பதை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். அதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டார். முதல் டெஸ்டில் நன்றாக விளையாடிய அவருக்கு 2வது போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர் தனது தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்ட பிறகும் நடவடிக்கை எடுப்பது சரியல்ல. அவருக்கு மீண்டும் அணியில் இடமளிக்க வேண்டும்

கடந்து செல்ல வேண்டும்

கடந்து செல்ல வேண்டும்

ஒருவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவுடன் அதனை கடந்து செல்ல வேண்டும். அதுவும் கடமைக்காக அவர் கேட்கவில்லை, அடிமனதில் இருந்து உண்மையாக மன்னிப்பு கோரியுள்ளார். அவருக்கு அபராதம் விதிக்கக்கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால் ஒரு விளையாட்டு வீரருக்கு விளையாட தடைவிதிப்பது என்பது மிகப்பெரிய தண்டனை ஆகும்.

Story first published: Wednesday, June 16, 2021, 18:00 [IST]
Other articles published on Jun 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+