ஆக, அண்ணனின் இந்த 42வது பிறந்த நாளையொட்டி... வாழ்த்துங்கள் சச்சினை!
மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தனது வாழ்க்கையின் பாதிக் காலத்தை கிரிக்கெட்டிலேயே கழித்த பெருமை சச்சினுக்கு உண்டு. இவர் செய்யாத சாதனைகள் இல்லை.
இன்று சச்சினுக்கு 42 வயதாகிறது. 16 மாதங்களுக்கு முன்புதான் சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார் என்பது நினைவிருக்கலாம்.

சாதனை நாயகன்...
கிரிக்கெட்டையும் சச்சினையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ரசிகர்களின் மனங்களில் இன்னும் சூப்பர் ஸ்டாராக வாழ்ந்து வருபவர் சச்சின். அவர் படைத்த சாதனைகள் அப்படி.

மற்றவர்களால் உடைக்க முடியாதது...
எல்லா வீரர்களையும் விட சற்று உயர்வான நிலையில்தான் சச்சினின் சாதனைகள் இன்னும் உள்ளன. அவரது பல சாதனைகளை அவ்வளவு சீக்கிரம் யாராலும் உடைக்க முடியாத அளவுக்கு உசத்தியானது, ஒஸ்தியானது.

வெள்ளி விழா...
கிட்டத்தட்ட 25 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை வாழந்ந்துள்ளார் சச்சின் என்பது மிகவும் ஆச்சரியமானது, அயர்ச்சியை உண்டு பண்ணுவதாகும். இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்லமல் உலக கிரிக்கெட்டிலும் சச்சின் பதித்த முத்திரைகள் ஏராளம் ஏராளம்.

சுயசரிதை...
கடந்த ஆண்டு தனது சுயசரிதையை வெளியிட்டு அதிலும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சச்சின். அது பல விவாதங்களை எழுப்பியது நினைவிருக்கலாம். மேலும் கடந்த ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியின்போது ஐசிசியின் பிராண்ட் அம்பாசடராகவும் திகழ்ந்தார் சச்சின்.

கேரளா பிளாஸ்டர்ஸ்...
தற்போது ஓய்வுக்குப் பின்னர் கேரளா பிளாஸ்டர்ஸ் என்ற கால்பந்து அணியை நிர்வகித்து வருகிறார் சச்சின். மேலும் போட்டிகள் குறித்த கருத்துக்களையும் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications