
பழைய நண்பர்கள்
சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் எத்தனை சாதனைகள் படைத்தாலும் மிக முக்கியமான சாதனையாக அவற்றில் இருப்பது அவர் பள்ளி பருவத்தில் செய்த ஒரு சாதனை தான். பள்ளியில் படிக்கையில் நடத்த ஒரு பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டியில் சச்சினும், காம்ப்ளியும் ஒன்றாக இணைத்து 664 ரன்கள் அடித்தனர். அந்த போட்டி சச்சினின் கிரிக்கெட் வாழ்வில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தது. இன்றளவும் சச்சின் பற்றி குறிப்பிடுபவர்கள் பலரும் அந்த போட்டி குறித்தும் குறிப்பிடுவர். இந்த போட்டியில் சச்சினுடன் சேர்ந்து புகழடைந்தவர் தான் காம்ப்ளி.

முறிந்து போன நட்பு
அதன்பின் சச்சின் பள்ளி போட்டிகளோடு நிறுத்தாமல் ரஞ்சி, ஒருநாள் போட்டி, 100 சதங்கள் என வரிசையாக பல உயரங்களை தொட்டார். ஆனால் காம்ப்ளி அதன்பின் கிரிக்கெட்டில் போதிய கவனம் செலுத்தாமல் ஏதோ சில போட்டிகளில் ஆடி சொதப்பி வெளியேறினார். அவரது உடலும் கிரிக்கெட்டுக்கு ஒத்துழைக்காமல் இருந்தது. இதையடுத்து சச்சினுக்கு , காம்ப்ளிக்கும் இடையில் நிறைய இடைவெளி ஏற்பட்டது.

சச்சினை சீண்டிய காம்ப்ளி
இந்த நிலையில் காம்ப்ளிக்கு உடல் நிலை சரியில்லாமல் சில நாட்கள் மருத்துவமனையில் வேறு அனுமதிக்கப்ட்டார். இதையடுத்து அவர் கிரிக்கெட்டை விட்டு மொத்தாமாக விலக நேர்ந்தது. மேலும் ''சச்சின் என்னை மறந்து விட்டார்'' என காம்ப்லி சோகமாக பத்திரிக்கைகளுக்கு அப்போது பேசி இருந்தார். மேலும் அவர் எழுதிய புத்தகத்தில் சச்சினை பற்றி குறிப்பிடாமல் தவிர்த்தார். சச்சின் குறித்து சில நாட்களுக்கு கோபமாக பத்திரிக்கைகளில் இவர் பேசினார்.
மீண்டும் ஒன்றாக இணைந்தனர்
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற "டெமாக்ரசி 11- தி கிரேட் இந்தியன் கிரிக்கெட் ஸ்டோரி" என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழா நடைபெற்றது. பத்திரிகைாளர் ராஜ்தீப் சரதேசாய் இந்தப் புத்தகத்தை எழுதியிருந்தார். இந்த புத்தக வெளியிட்டு விழாவிற்கு நிறைய முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த விழாவுக்கு சச்சினும், காம்ப்ளியும் கூட அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் அந்த விழாவில் மீண்டும் பழையபடி பேசிக் கொண்டார்.
சச்சினுக்கு ஐ லவ் யூ சொன்ன காம்ப்ளி
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து காம்ப்லி டிவிட்டரில் மிகவும் மகிழ்ச்சியாக எழுதியிருக்கிறார். அதில் ஐ லவ் யு சச்சின் என்று எழுதியிருக்கிறார். மேலும் மற்றொரு டிவிட்டில் "நாங்கள் எடுக்கும் முதல் செல்ஃபீ இதோ'' என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications