For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பை மைதானத்தை தொட்டு வணங்கி கண்ணீருடன் வெளியேறிய சச்சின்!!

By Mathi

மும்பை: மும்பை வாங்கடே மைதானத்தை கடைசியாக தொட்டு வணங்கி கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறினார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் இன்றைய போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இன்றைய போட்டி முடிந்த உடன் மைதானத்தை விட்டு ரசிகர்கள் எழவில்லை. சச்சின் பிரிவு உரையாற்றினார்.

Sachin

அதைத் தொடர்ந்து சிறிது நேரம் மைதானத்தில் நின்று கொண்டிருந்த சச்சின் தேசியக் கொடியை ஏந்தியவாறு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வலம் வந்தார். அவருடன் குடும்பத்தினர், சக வீரர்களும் வந்தனர்.

அப்போது முரளி விஜயும் தவானும் சச்சினை தூக்கி தங்கள் தோள்மீது அமரவைத்துக் கொள்ள சச்சின் தொடர்ந்து மைதானத்தை வலம் வந்தார். பின்னர் தனியாக மைதானத்துக்குள் சென்ற அவர் தரையைத் தொட்டு வணங்கி கண்களில் ஒற்றிக் கொண்டார்.

Sachin

அப்போது அவர் கண்கலங்கினார். அந்த கண்ணீருடன் மைதானத்தை விட்டு சச்சின் வெளியேறியபோது மைதானமே உணர்ச்சிப்பெருக்கில் மூழ்கிப் போனது என்பது மிகையல்ல..

குட்பை சச்சின்!

Story first published: Saturday, November 16, 2013, 16:48 [IST]
Other articles published on Nov 16, 2013
English summary
Sachin Tendulkar walks away from the throng, to the Wankhede pitch, bows and touches it, and walks back, wiping away tears.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+