Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் விளையாடுவதை விட அற்புதமான விஷயம் எது தெரியுமா? சச்சின் போட்ட ட்வீட்

Recommended Video

கிரிக்கெட் விளையாடுவதை விட அற்புதமான விஷயம் என்ன? சச்சின் ட்வீட்-வீடியோ

டெல்லி : சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதில் சமூக அக்கறை கொண்ட பணிகளும் அடங்கும். அந்த வகையில் யுனிசெப் தூதராக இருக்கும் சச்சின், பூட்டான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.

"கை கழுவுதல்" பற்றிய அவசியத்தை பரப்பும் வகையில் அங்கே சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

கை கழுவுதல் தினத்தில் சச்சின்

கை கழுவுதல் தினத்தில் சச்சின்

அக்டோபர் 15 அன்று சர்வதேச கை கழுவுதல் தினமாகும். யுனிசெப் தூதராக சச்சின் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு பூட்டான் நாட்டிற்கு பயணம் செய்தார். அங்கே கால்பந்து ஆடிய சச்சின், பூட்டான் நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் அணியுடன் சில மணி நேரம் செலவு செய்து யோசனைகளை அளித்தார்.

கால்பந்து ஆடிய சச்சின்

முதலில் பள்ளிக் குழந்தைகளுடன் கால்பந்து ஆடிய சச்சின், போட்டிக்கு பின்னர் அனைவரையும் கை கழுவுமாறு கூறி அதன் அவசியத்தை உணர்த்தினார். உணவுக்கு முன்னும் கைகளை கழுவ வேண்டும் எனஅறிவுறுத்தினார்.

பூட்டான் கிரிக்கெட் அணிக்கு யோசனை

பூட்டான் நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் அணியுடன் நேரம் செலவிட்ட சச்சின் அவர்களுக்கு கிரிக்கெட் தொடர்பான யோசனைகளை அளித்தார். இது பற்றி அவர் வெளியிட்ட ட்வீட்டில், "கிரிக்கெட் விளையாடுவதை விட சிறந்த விஷயம், மலைகளில் கிரிக்கெட் ஆடுவது தான். பூட்டான் கிரிக்கெட் அணியுடன் நேரம் செலவிட்டது நன்றாக இருந்தது.

பிரதமரை சந்தித்த சச்சின்

அதன் பின் பூட்டான் நாட்டின் பிரதமரை சந்தித்தார் சச்சின். அது தனக்கு கிடைத்த மரியாதை. அவருடன் தான் கைகளை சுத்தம் செய்தலின் அவசியம் குறித்து விவாதித்தேன் என குறிப்பிட்டுள்ளார் சச்சின். இதற்கு முன் சச்சின் யுனிசெப்-பின் போலியோ விழிப்புணர்வு பற்றி பல ஆண்டுகள் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 23, 2018, 17:51 [IST]
Other articles published on Oct 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+