
மோசமான அனுபவம்
இந்திய அண்டர் 19 அணியின் மேலாளராக இருந்த டென்சிங் அளித்துள்ள பேட்டியில், ஐசிசி தொடர்களை நடந்த கொஞ்சமும் தகுதியற்ற நாடுகள் மேற்கிந்திய தீவுகள் தான். நாங்கள் அங்கு பல மோசமான அனுபவங்களை சந்திதோம். அதையும் மீறி தான் நாங்கள் சாம்பியன் பட்டம் வென்றோம்.

தடுத்து நிறுத்தம்
நாங்கள் கயானாவில் வந்து இறங்கியதும், எங்களை அங்குள்ள அதிகாரிகள் நாட்டிற்குள் விடவில்லை. காரணம், எங்கள் வீரர்களில் சிலர் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை. நான் அங்குள்ள அதிகாரியிடம் எடுத்து கூறினேன், எங்கள் நாட்டில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்று சொன்னேன்.

உணவு தரவில்லை
ஆனால் அவர்கள் கேட்கவில்லை. பிறகு ஐசிசி மற்றும் பிசிசிஐ,, கயானா அரசு தலையிட்ட பிறகு தான் நாங்கள் அனுமதிக்கப்பட்டோம். இதன் பிறகு பயோ பபுள் என்பது ஒரு நகைச்சுவையாக தான் இருந்தது. பயோ பபுளுக்கு உரிய எந்த வசதியும் வழங்கப்படவில்லை. ஒரு மோசமான ஹோட்டலில், பல வெளிநாட்டு பயணிகளுக்கு நடுவில் தான் அங்கு தங்கினோம். அங்கு உணவும் சரிவர வழங்கப்படவில்லை.

தண்ணீர் இல்லை
இதனால் ஹோட்டலுக்கு வெளியே இருந்த இந்திய உணவகங்களில் தான் சாப்பிட்டோம். பிறகு நாங்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய மைதானத்தில் பாத்ரூமில் தண்ணீர் இல்லை. சுகாதாரமற்ற முறையில் இருந்தது. அங்குள்ள நிர்வாகிகளும் அதனை கவனிக்கவில்லை. நாக் அவுட் போட்டிகளில் தான் எங்களுக்கு உரிய வசதி கிடைத்தது என்று அணி மேலாளர் டென்சிங் கூறினார்.
Recommended Video

மருத்துவ வசதி
கொரோனா பாதிக்கப்பட்ட போது எங்களுக்கு எந்த வித மருத்துவ உதவிகளும் கிடைக்கவில்லை. ஒரு மாத்திரை கூட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தரவில்லை. எங்கள் அணியில் இருந்த பிஷியோ தான் எங்களை காப்பாற்றினார். கொரோனா பரிசோதனை செய்த 2 நாட்களுக்கு பிறகு தான் முடிவு வந்தது. அதற்குள் அணியில் இருந்த பலருக்கும் பரவிவிட்டது. இந்தியாவில் உள்ள மாநில கிரிக்கெட் சங்கங்கள் செய்து தரும் வசதி கூட, இங்கு எங்களுக்கு செய்து தரப்படவில்லை.


Click it and Unblock the Notifications