Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Exclusive: "அவர்" ரெண்டு மணி நேரம் முழுசா ஆடுனா.. நியூஸிலாந்து "கதம் கதம்" - சடகோபன் ரமேஷ்

சென்னை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் யார் என்பது குறித்து சடகோபன் ரமேஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.

வரும் ஜூன் 18ம் தேதி, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களமிறங்க விராட் கோலி தலைமையிலான படை தயாராகி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்று வென்று கெத்து காட்டும் நியூசிலாந்து அணி, இந்தியாவையும் பதம் பார்க்கும் என்று பல எக்ஸ்பெர்ட்ஸ் கூறும் நிலையில், நாம் முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷை தொடர்பு கொண்டு பேசினோம். அதில், இந்திய அணியின் 'X-Factor' பிளேயர் யார்? அதேபோல், நியூசிலாந்துக்கு யார்? என்று நாள் கேள்வி எழுப்பினோம்.

செகண்ட் நியூ பந்து

செகண்ட் நியூ பந்து

இதுகுறித்து பதிலளித்த சடகோபன் ரமேஷ், "இந்த மாதிரி முக்கியமான மேட்சுல உங்களோட நம்பர்.7 ரொம்ப Crucial. ஒன்னு சீக்கிரமா அவுட்டாகிடுவாங்க. இல்ல.. வேகமா அடிச்சு, ஒரு நல்ல ஸ்கோருக்கு கொண்டுட்டு போவாங்க. இன்னொரு சிக்கல், அவங்க செகண்ட் நியூ பால் ஆடணும். நிறைய நேரத்தில், நம்பர்.6 அல்லது நம்பர்.7ல் ஆடுபவர்கள் செகண்ட் நியூ பந்தில் விளையாட வேண்டியிருக்கும்.

மிகப்பெரிய அட்வான்டேஜ்

மிகப்பெரிய அட்வான்டேஜ்

ஸோ, அந்த வகையில் ரிஷப் பண்ட் நம்மோட 'X-Factor' பிளேயரா இருக்கலாம். அவர் செம ஃபார்மில் இருக்கார். ரெண்டு மணி நேரம், மூணு மணி நேரம் ஆடுனார்-னா இந்தியாவுக்கு அது மிகப்பெரிய அட்வான்டேஜ். அதேமாதிரி, நியூசிலாந்தின் 'X-Factor' டிரெண்ட் போல்ட் தான். லெஃப்ட் ஆர்ம் ஃபாஸ்ட் பவுலர். புது பந்துல அட்டகாசமா வீசுவார். ரோஹித், கோலி மாதிரியான பிளேயர்ஸை காலி பண்ணார்னா நியூசிலாந்து Driver Seat-ல டிராவல் பண்ணுவாங்க.

இரண்டு ஸ்பின்னர்ஸ்

இரண்டு ஸ்பின்னர்ஸ்

அதுமட்டுமல்ல, சவுத்தாம்ப்டன் பிட்ச் கொஞ்சம் Slowish-ஷா இருக்க வாய்ப்பிருக்கு. இங்கிலாந்துல, விக்கெட் எப்படி இருக்கும் என்பது நம்மால பிரெடிக் பண்ண முடியாது. Grass கொடுக்குறாங்களா, இல்ல கண்டிஷன்ஸ் Fast Bowling-க்கு சாதகமா இருக்குமோ நமக்கு தெரியாது. கோலி அதை வச்சு டீம் ஃபைனல் பண்ண முடியும். பட், As of now, ஃபாஸ்ட் பவுலர்ஸ், இரண்டு ஸ்பின்னர்ஸ் எடுக்குற மாதிரி தான் விக்கெட் இருக்கு.

ஸ்விங் கண்டிஷன்ஸ்

ஸ்விங் கண்டிஷன்ஸ்

ஸ்விங்கிங் கண்டிஷன்ஸ் ரொம்ப இல்லாம இருந்தா, கண்டிப்பா இந்த ரெண்டு பிளேயர்ஸும், டீமுல இருக்கணும்-ங்கறதைத் தான் கோலி விரும்புவார். ஸோ, மேட்ச் ஆரம்பிக்குற 24 மணி நேரத்துக்கு முன்னாடி தான், டீம் பற்றி யோசிக்க முடியும். கோலியும் ஸ்விங் கண்டிஷன்ஸ், பிட்ச் இதெல்லாம் பார்த்த பிறகு தான் முடிவெடுப்பார்" என்றார்.

Story first published: Thursday, June 17, 2021, 17:50 [IST]
Other articles published on Jun 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+