For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியின் ஓய்வு எப்போது?..பாக். ஜாம்பவான் சாஹித் அஃப்ரிடி கூறிய கருத்து.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

துபாய்: விராட் கோலியின் ஓய்வு முடிவு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹீன் அஃப்ரிடி கூறியுள்ளார்.

Recommended Video

Kohli -ஐ விட Rohit எமோஷனை வெளியே காட்டமாட்டார் - சுமந்த் சி ராமன்

ஃபார்ம் அவுட் காரணமாக கடும் விமர்சனங்களுக்கு உள்ளான விராட் கோலி, தற்போது அட்டகாசமான கம்பேக்கை கொடுத்துள்ளார்.

நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

விராட் கோலியின் கம்பேக்

விராட் கோலியின் கம்பேக்

இப்படி விராட் கோலி நல்ல கம்பேக் கொடுத்த போதும், பிசிசிஐ முக்கிய முடிவை எடுத்துள்ளது. 33 வயதாகும் விராட் கோலி ஏற்கனவே நிறைய போட்டிகளில் விளையாடிவிட்டார். இனியும் அவர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக விளையாடினால், ஃபார்ம் அவுட்டாகிவிடுவார் என்பதால் டி20ல் இருந்து ஓய்வு பெற அறிவுறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஃப்ரிடி அட்வைஸ்

அஃப்ரிடி அட்வைஸ்

இந்நிலையில் கோலியின் ஓய்வு குறித்து பாக். முன்னாள் வீரர் சாஹீன் அஃப்ரிடி முக்கிய அட்வைஸை கொடுத்துள்ளார். அதில், விராட் கோலி தனது ஆரம்ப காலத்தில் விளையாடிய விதம் எனக்கு இன்றும் ஞயாபகம் உள்ளது. அவர் ஒரு சாம்பியன். எனவே புகழின் உச்சியில் இருக்கும் போது தான் அவர் ஓய்வு பெறுவார் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

ஆக்ரோஷ ஆட்டம்

ஆக்ரோஷ ஆட்டம்

அணியில் இருந்து கழட்டிவிடுவது, ஃபார்ம் அவுட்டாக இருப்பது போன்ற காரணங்களுக்காக ஓய்வு பெறுவது சரியான முடிவு கிடையாது. இதுபோன்று இல்லாமல், விராட் கோலி தனக்கே உரிய ஸ்டைலில் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்துடன் தனது பயணத்தை முடிப்பார் என அஃப்ரிடி கூறியுள்ளார்.

கோலி பயணம்

கோலி பயணம்

கடந்த 2008ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான விராட் கோலி, இதுவரை 102 டெஸ்ட், 262 ஒருநாள் போட்டிகள் மற்றும் 104 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 72 சதங்களுடன் மொத்தமாக 24,000 ரன்களை கடந்து அசைக்க முடியாத புகழில் விராட் கோலி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, September 13, 2022, 20:06 [IST]
Other articles published on Sep 13, 2022
English summary
Sahid Afridi gives a important note about the virat kohli's retirement plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+