Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாய் சுதர்சன் அவுட் ஆனதை பார்த்து கம்பீர் ரியாக்ஷன்.. 2வது இன்னிங்ஸிலும் சொதப்பினால் ஆட்டம் குளோஸ்

லீட்ஸ்: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சாய் சுதர்சன், ரன் கணக்கைத் தொடங்காமலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்திருக்கிறார். இதை அடுத்து அவர் இனியும் அணியில் நீடிக்க வேண்டும் என்றால் இன்னும் ஒரு வாய்ப்பு மட்டுமே இருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 22 வயதான சாய் சுதர்சன் அறிமுகமானார். 2025 ஐபிஎல் தொடரில் 759 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்த வீரராக இருந்ததால், அவர் மீது மிகப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவர் தனது முதல் இன்னிங்ஸில் நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் டக் அவுட் ஆனார்.

Sai Sudharsan IND vs ENG Gautam Gambhir

அவர் ஆட்டமிழந்து வெளியேறியபோது, இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உச்சுக்கொட்டி தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இதற்கு ஒரு பின்னணியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. சாய் சுதர்சனை இந்திய அணியிலேயே சேர்க்கக்கூடாது என பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வாதிட்டதாகவும், ஆனால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சனுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒன்றாக ஆடியவர் என்பதால், அவரை நிச்சயம் அணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

இறுதியில், தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், சாய் சுதர்சனை இந்திய அணியில் ஒரு வீரராகச் சேர்த்தார். இங்கிலாந்து சென்ற பிறகு தான் ஆடிய ஒரு பயிற்சி ஆட்டத்தில் சாய் சுதர்சன் பெரிதாக ரன் குவிக்காத போதிலும், அவருக்கு முதல் டெஸ்ட்டில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

மூன்றாம் வரிசையில் களமிறங்கிய அவர், தான் சந்தித்த நான்காவது பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து, ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். தற்போது அவருக்கு கேப்டன் சுப்மன் கில் மட்டுமே ஆதரவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் லெவனில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள, சாய் சுதர்சன் இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்தபட்சம் ஒரு அரை சதமாவது அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தற்போது இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருக்கிறது.

ஒருவேளை, இந்திய அணி அதிக ரன்கள் குவித்து இந்தப் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், சாய் சுதர்சனுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காமலேயே போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 21, 2025, 11:43 [IST]
Other articles published on Jun 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+